Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND v ZIM- என் இடத்தை தர மாட்டேன்.. சுயநலமாக செயல்பட்ட கில்..சதம் அடித்தும் ஓப்பனிங்கை இழந்த அபிஷேக்

ஹராரே : இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது t20 போட்டி ஹாராரேவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களும் இந்த அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ind vs zim shubman gill abhishek sharma sanju samson

இந்த சூழலில் இரண்டாவது டி20 போட்டியில் 47 பந்துகளில் அபிஷேக் ஷர்மா சதம் அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இதனால் அபிஷேக் ஷர்மா, ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் கில் தொடக்க வீரர் என்ற இடத்தை தியாகம் செய்துவிட்டு மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது.

ஏனென்றால் கில் தொடக்க வீரராக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒரே மாதிரி போல் சிறப்பாக விளையாடுவதில்லை. அத்திப் பூத்தாற் போல் ஒரு பெஸ்ட் இன்னிங்ஸை ஆடிவிட்டு அமைதி ஆகி விடுகிறார். இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் கூட அவருடைய பெயர் பரிசளிக்கப்படவில்லை. இதனால் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராகவும் தற்போது மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளதால் அந்த இடத்திற்கு கில்லும் போட்டி போடுவார் எனும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கில் தன்னுடைய தொடக்க வீரர் என்ற இடத்தை தர மாட்டேன் என்று கூறிவிட்டார். இதன் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஜெய்ஸ்வாலுடன் அவர்தான் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரன் என்ற இடத்தை இழந்த கில் டி20 கிரிக்கெட்டிலும் அதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது என நினைக்கிறார்.

பவர் பிளேவில் தற்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் ஜெய்ப்பால் 18 பந்துகளில் 27 ரன்களும், கில் 19 பந்துகளில் 27 ரன்களும் எடுத்திருக்கிறார்கள். ஆனால் கில்லை விட அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடுவார். இதனால் தன்னுடைய இடம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்தாரா என்று விமர்சனமும் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, July 10, 2024, 17:26 [IST]
Other articles published on Jul 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+