Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM 3rd T20: இந்தியா - ஜிம்பாப்வே 3வது டி20 போட்டி எப்போது? தேதி, நேரம் மற்றும் முழு விவரம்

ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று உள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. அதன் முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கே இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

IND vs ZIM india zimbabwe

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டிநடக்க உள்ள தேதி மற்றும் நேரம்:

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டி ஜிம்பாப்வே-வில் உள்ள ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (புதன் கிழமை) மாலை 4:30 மணிக்கு துவங்க உள்ளது. இதே மைதானத்தில் தான் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இரண்டு அணிகளுமே ரன் குவிக்க திணறின. ஜிம்பாப்வே 115 ரன்களும், இந்தியா 102 ரன்களும் மட்டுமே எடுத்தன. மாறாக இரண்டாவது போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி 234 ரன்கள் குவித்தது. எனவே, மூன்றாவது போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரை எந்த சேனலில் பார்ப்பது?

இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்-கில் ஒளிபரப்பாகும். சோனி ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் இந்த போட்டிகளை காணலாம். கேபிள் மற்றும் டிஷ் நெட்வொர்க்-களில் சோனி குழும சேனல்கள் பலவற்றை இலவசமாக காண முடியாது. எனவே, இந்த கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பினால் உங்கள் தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பாவதை உறுதி செய்து கொள்ளவும்.

இந்தியா ஜிம்பாவே டி20 தொடர் எந்த மொபைல் செயலியில் பார்ப்பது?

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள டி20 தொடர் சோனி லைவ் மொபைல் செயலியில் ஒளிபரப்பாகும். இந்த மொபைல் செயலியில் இலவசமாக இந்த போட்டிகளை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. சோனி லைவ் செயலியில் ஒரு மாதத்திற்கு 299 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளை மொபைல் அல்லது லேப்டாப்பில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 9, 2024, 8:31 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+