Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM 4th T20: இந்தியா - ஜிம்பாப்வே 4வது டி20 போட்டி எப்போது? நேரம், தேதி, அட்டவணை

ஹராரே: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று உள்ளது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. அதன் முடிவில் இந்திய அணி 2 - 1 என்ற அளவில் முன்னிலை வகிக்கிறது. அடுத்து நடக்க உள்ள நான்காவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது. அடுத்த போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. அதன் பின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நான்காவது போட்டி நடைபெற உள்ளது.

IND vs ZIM india zimbabwe

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 4வது டி20 நடக்கும் தேதி, நேரம் மற்றும் இடம்:

இந்த நிலையில் நான்காவது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை (ஜூலை 13, சனிக்கிழமை) அன்று மாலை 4:30 மணிக்கு போட்டி துவங்கும். மாலை 4 மணிக்கு டாஸ் போடப்படும். இந்த போட்டி ஜிம்பாப்வே-வில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் அங்கு தான் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 5வது டி20 நடக்கும் தேதி மற்றும் நேரம்:

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அந்த போட்டியும் மாலை 4:30 மணிக்கு தொடங்கும்.4 மணிக்கு டாஸ் போடப்படும்.

இந்தியா - ஜிம்பாப்வே டி20 போட்டிகளை எந்த சேனல் மற்றும் மொபைல் செயலியில் பார்ப்பது?

இந்தியா - ஜிம்பாப்வே டி20 போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் டென் குழும சேனல்களில் காணலாம். மொபைல் மற்றும் இணைய தளத்தில் இந்தியா - ஜிம்பாப்வே போட்டிகளை காண விரும்புபவர்கள் சோனி லிவ் (Sony Liv app) மொபைல் செயலி அல்லது சோனி லிவ் (Sony Liv) இணைய தளத்தில் போட்டிகளை காணலாம். இந்த போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. சோனி லிவ் சந்தாதாரர்கள் மட்டுமே நேரலையில் இந்த போட்டிகளை காண முடியும்.

Story first published: Friday, July 12, 2024, 9:10 [IST]
Other articles published on Jul 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+