Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM -டாசை இழந்த கில்.. ருதுராஜ் நீக்கம்! இந்திய அணியில் 2 மாற்றம்! அராத்து வீரருக்கு வாய்ப்பு

ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற ஜிம்பாப்வே அணி கடுமையாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை பொருத்தவரை உலக சாம்பியன் ஆக இருப்பதால் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சி செய்யும். இந்த சூழலில் தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இன்றைய பிளேயிங் லெவனில் இடம் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ind vs zim ruturaj riyan parag

அதற்கு ஏற்றார் போல் இரண்டு மாற்றங்களை கேப்டன் கில் செய்திருக்கிறார். இந்த தொடர் முழுவதுமே கேப்டன் கில் தான் டாசை வென்றார். இந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடுகளம் போக போக பேட்டிங்குக்கு சாதகமாக மாறும் என்று நினைக்கின்றேன்.

குறிப்பாக இரண்டாவது பேட்டிங் செய்வது இந்த ஆடுகளத்தின் சாதகமாக இருக்கும். இந்த தொடரின் முடிவு எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஏனென்றால் எங்களிடம் திறமை இருக்கின்றது. எங்களிடம் நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் உத்வேகத்துடன் இருக்கின்றோம். கடைசி போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றியுடன் தொடரை முடிக்க நாங்கள் முயற்சி செய்வோம்.

நீங்கள் அணியில் இன்று பிராண்டன் மவுட்டா களமிறங்குகிறார். சத்தாரா இன்று ஆட்டத்தில் விளையாடவில்லை. காரணம் தொடர்ந்து நான்கு டி20 போட்டிகளில் விளையாடிவிட்டார். டெஸ்ட் போட்டி வேறு வருகிறது. இதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கின்றோம் என்று ஷிக்கந்தர் ராசா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய கில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம்.

எங்களுக்கு பிரச்சனை இல்லை இந்த தொடரில் எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். குறிப்பாக தொடர்ந்து இரண்டு போட்டிகளை ஓய்வு இன்றி விளையாடுவது என்பது கடினமான விஷயமாக தான் இருக்கின்றது. எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ரியான் பராக் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். என்று கில் தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ருத்ராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Sunday, July 14, 2024, 16:26 [IST]
Other articles published on Jul 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+