அபிஷேக் சர்மாவுக்கு மெகா வாய்ப்பு.. 16 ரன்கள் அடித்தால் விராட் கோலி சாதனைப் பட்டியலில் இடம்
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இன்னும் 16 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்து விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள முக்கிய சாதனைப் பட்டியலில் இணைய உள்ளார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 23 அன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா, இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார். இதுவரை 203 டி20 போட்டிகளில் 199 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 5,984 ரன்களைக் குவித்துள்ளார்.

இந்த போட்டியில் அவர் மேலும் 16 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 200 இன்னிங்ஸ்களுக்குள் 6,000 ரன்களைக் கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன்பு கே.எல். ராகுல் (166 இன்னிங்ஸ்கள்), விராட் கோலி (184 இன்னிங்ஸ்கள்) மற்றும் சுப்மன் கில் (185 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் மட்டுமே இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் சர்மா வைத்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடிய 6 போட்டிகளில் அவர் 179 ரன்கள் எடுத்துள்ளார். இந்த போட்டியில் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசாவை விட அபிஷேக் சர்மா 16 ரன்கள் கூடுதலாக எடுக்கும் பட்சத்தில், இந்தியா - ஜிம்பாப்வே டி20 மோதல்களில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற முதலிடத்தையும் பிடிப்பார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இந்திய அணி ஜிம்பாப்வே தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்த தொடரிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் அது இந்திய கிரிக்கெட்டில் பெரும் பின்னடைவாக மாறும்.


Click it and Unblock the Notifications

