Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உனக்கு ஓவர் வாய் பா! நான் விளையாடாத உலககோப்பையை பார்க்க மாட்டேன் என சொன்னது என்ன ஆச்சு?

ஹராரே : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், தற்போது ஜிம்பாப்வே எதிராக முதல் டி20 போட்டியில் இளம் வீரர்களை கொண்ட இந்தியா தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பையில் பங்கேற்ற ஒரு வீரர் கூட இந்த தொடரில் விளையாடவில்லை. ஆனால் வெற்றியோ தோல்வியோ அது இந்தியா என்ற பெயருக்குதானே சேரும் என்று ரசிகர்கள் கலக்கமடைந்து இருக்கிறார்கள்.
இதனால் இளம் வீரர்களை விட்டு வெளுத்து வருகின்றனர்.

ind vs zim shubman gill riyan parag

நாங்கள் சந்தோஷமாக இரண்டு நாட்கள் இருந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். குறிப்பாக இளம்வீரர் ரியான் பராக் ரசிகர்களிடம் செம அடி வாங்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்த ரியான் பராக் இன்றைய ஆட்டத்தில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ஆனால் ரியான் பராக் திறமை வாய்ந்த வீரராக கருதப்பட்டாலும், வாய்க்கொழுப்பு மிகவும் ஜாஸ்தி. சிலர் வாயால்தான் கெடுவார்கள் என்று கூறுவார்களே, அதற்கு நல்ல எடுத்துக்காட்டு ரியான் பராக் தான். டி20 உலககோப்பையின் போது அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரியான் பராக், நான் அந்த உலக கோப்பையில் விளையாடவில்லை. நான் விளையாடாத ஆட்டத்தை ஏன் நான் பார்க்க வேண்டும் என்று திமிராக பதில் கூறினார்.

தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை தான் ரியான் பராக் இவ்வளவு மோசமாக விமர்சித்திருக்கிறார் என்று அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிராக பெரிய வாய்ப்பு ரியான் பராக்கிற்கு கிடைத்தது.ஆனால் அதை அவர் சொதப்பியதும் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். வாய் பேச்சில் மட்டும் தான் திறமை இருக்கிறது என்றும் செயலில் ரியான் பராக் காட்டுவதில்லை என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

திறமையான வீரராக கருதப்பட்டாலும் அவர் தன்னுடைய வாயை கட்டுப்படுத்திக் கொண்டு, கிரிக்கெட் விளையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய வீரராக வருவார் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது இதில் இந்தியா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Sunday, July 7, 2024, 6:31 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+