Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி இந்திய அணித் தேர்வு இப்படிதான்.. வெளிப்படையாக சொன்ன கவுதம் கம்பீர்.. என்ன நடக்கப் போகுதோ?

மும்பை: இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு கவுதம் கம்பீர் பதவியில் இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. இவரது பதவிக் காலத்தில் 5 ஐசிசி தொடர்கள் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் சீனியர் வீரர்களுக்கும் கவுதம் கம்பீருக்கும் கருத்து வேறுபாடு எழுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏற்கனவே விராட் கோலியுடன் கவுதம் கம்பீர் களத்திலேயே மோதலில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் பல்வேறு வீரர்களையும் காட்டமாக விமர்சித்துள்ளார். இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

ind vs zim india zimbabwe


கடந்த சில ஆண்டுகளாக கவுதம் கம்பீர் பேசிய பல்வேறு விஷயங்கள் ரசிகர்களால் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து கவுதம் கம்பீர் பேசியுள்ள கருத்து ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அஸ்வினுக்கு அளித்த நேர்காணலில், இந்திய டி20 அணிக்கான தேர்வு ஐபிஎல் தொடரில் இருந்து நடக்க வேண்டும்.

அதேபோல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான தேர்வு விஜய் ஹசாரே தொடரில் இருந்து நடக்க வேண்டும் என்றும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் தேர்வு ரஞ்சி டிராபி தொடரில் இருந்து நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் பதவிக் காலத்தில் இந்திய அணியின் தேர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் பயிற்சியாளர்கள் அணித் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போது ஒருமுறை கூட அணித் தேர்வுக்கான மீட்டிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதேபோன்ற சூழல் தான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த போதும் நடந்தது.

ஆனால் பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா ஆகியோரிடம் கவுதம் கம்பீர் கூடுதல் பொறுப்பும், அதிகாரமும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் கேப்டனுக்கு இணையான அதிகாரம் பயிற்சியாளருக்கும் அளிக்கப்படுமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் கேப்டனுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, பயிற்சியாளர்களின் தலையீடு அதிகரித்துள்ளதை போல், இந்திய அணியிலும் மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, July 10, 2024, 12:27 [IST]
Other articles published on Jul 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+