IND vs ZIM: காதலிக்கு முத்தம் தந்த ஹர்திக் பாண்டியா.. அரைசதம் அடித்த உடன் கொண்டாட்டம்
சென்னை: சென்னை: ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன் பின் தனது காதலி மஹியேகா ஷர்மாவுக்கு Flying Kiss கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்திய இன்னிங்ஸின் கடைசி பந்தில், ஒற்றைக்கையால் சிக்ஸர் அடித்து ஹர்திக் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். மைதானத்தில் இருந்த மஹியேகா, ஹர்திக்கின் ஆட்டத்தால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அரை சதம் அடித்ததை கொண்டாடிய ஹர்திக், மீண்டும் மஹியேகாவுக்கு சைகையில் முத்தம் கொடுத்தார்.

ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய ஹர்திக், 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்தார். அவரது அதிரடி இன்னிங்ஸில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடங்கும், ஸ்ட்ரைக் ரேட் 217.39. இது இந்தத் தொடரில் அவருக்கு இரண்டாவது அரை சதம் ஆகும். இதற்கு முன் நமீபியாவுக்கு எதிராக 28 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்தார்.
இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி 155 ரன்கள் குவித்து, ஹர்திக் பாண்டியன் (சராசரி 31.00, ஸ்ட்ரைக் ரேட் 161.45) அணிக்கு முக்கியப் பங்களிப்பு அளித்துள்ளார். அவரது அபாரமான அரை சதத்தால், இந்திய அணி 256/4 என்ற பிரமாண்டமான இலக்கை எட்டியது. இது டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
மேலும், இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர், ஒட்டுமொத்தமாக இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவாகியுள்ளது. இன்னிங்ஸின் இறுதியில் திலக் வர்மா, ஹர்திக் ஜோடி இணைந்து 31 பந்துகளில் 84 ரன்கள் குவித்து, அணிக்கு ஒரு அதிரடி ஃபினிஷிங் கொடுத்தனர்.
அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ரன்களுடன் துவக்கம் அளிக்க, இஷான் கிஷன் (38) மற்றும் சூர்யகுமார் யாதவ் (33) ஆகியோரும் முக்கியப் பங்களிப்பை அளித்தனர். திலக் வர்மா 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) குவித்து ஹர்திக்குக்கு உறுதுணையாக இருந்தார். வாழ்வா சாவா போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.


Click it and Unblock the Notifications