Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிஆர் ஏஜென்சி வச்சிருந்திருக்கலாம்.. கேகேஆர் வீரர்கள் புறக்கணிப்பு.. விரக்தியான வருண் சக்கரவர்த்தி!

சென்னை : ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய டி20 அணியில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படாத நிலையில், சோசியல் மீடியாவில் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். நானும் பிஆர் ஏஜென்சி மூலமாக சோசியல் மீடியாவில் ஆதரவு இருப்பது போல் காட்டியிருக்கலாம் என்று வருண் சக்கரவர்த்தி பதிவிட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி வீரர்கள் பயணிக்க உள்ளனர். இதற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த அணிக்கு இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

t20 world cup IND vs ZIM indian national cricket team 20 2024

அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரெல், துஷார் தேஷ்பாண்டே, ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்பின்னர்களாக ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பவுலிங் செய்த ஹர்சித் ராணா, 11 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதுகுறித்து ஹர்தித் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்லாமே சரியான நேரத்தில் உன்னை தேடி வரும் என்று பதிவிட்டுள்ளார். இந்த 2 வீரர்களின் பதிவுகளும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன.

வருண் சக்கரவர்த்தி கடைசியாக 2021ஆம் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். அதில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் மற்றொரு கேகேஆர் வீரரான ஹர்சித் ராணா இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பவுலிங் செய்த ஹர்சித் ராணா, 11 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதுகுறித்து ஹர்தித் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்லாமே சரியான நேரத்தில் உன்னை தேடி வரும் என்று பதிவிட்டுள்ளார். இந்த 2 வீரர்களின் பதிவுகளும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

Story first published: Wednesday, June 26, 2024, 7:30 [IST]
Other articles published on Jun 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+