Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: 256 ரன்கள் குவித்த இந்தியா.. 17 சிக்சர்கள் விளாசி சாதனை.. ஹர்திக், திலக், அபிஷேக் அதிரடி

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாபே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டர் என 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா இந்த போட்டியில் அதிரடி காட்டி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என முப்பது பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மூன்றாவது வீரராக ஆடிய இஷான் கிஷன் 24 பந்துகளின் 38 ரன்களும், நடுவரிசையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தனர்.

இதை அடுத்து இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் தடுமாறிய ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினர் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதில் இரண்டு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். மூன்றாவது வீரராக விளையாடிய திலக் வர்மா இந்த போட்டியில் கீழ் வரிசையில் களமிறங்கி 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.

இதில் நான்கு சிக்ஸர்கள், மூன்று பவுண்டர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இது டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் இந்திய அணி மொத்தமாக 17 சித்தர்கள் விளாசி இருக்கிறது. இதன் மூலம் ஒரு டி20 உலக கோப்பையில் அதிக சிக்ஸர்கள் விளாசி இந்தியா சாதனை படைத்திருக்கிறது.

Story first published: Thursday, February 26, 2026, 21:03 [IST]
Other articles published on Feb 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+