Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: எந்த அணியும் செய்யாத மெகா சாதனை.. இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த 2 ரெக்கார்டுகள்

சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்து மலைக்க வைக்கும் இலக்கை நிர்ணயித்தது. இந்த இன்னிங்ஸின் மூலம் இந்திய பேட்டர்கள் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத ஒரு புதிய சாதனையைப் படைத்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கட்டாயம் வெற்றி பெற வேண்டும், அதுவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிகர ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது.

IND vs ZIM India Smash Records vs Zimbabwe 256 Runs in T20 World Cup 2026 Sets New Historic Milestones

முதல் சாதனை: 6 பேட்டர்கள், 150 பிளஸ் ஸ்ட்ரைக் ரேட்

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் களமிறங்கிய 6 பேட்டர்களுமே தலா 20 ரன்களுக்கு மேல் எடுத்து, அனைவருமே 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 6 அல்லது அதற்கும் மேற்பட்ட பேட்டர்கள் 20 ரன்களுக்கு மேல் குவித்து, அவர்கள் அனைவருமே 150க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.

இந்திய வீரர்களின் பேட்டிங் விவரம்:

சஞ்சு சாம்சன் - 15 பந்துகளில் 24 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 160.00)
அபிஷேக் சர்மா - 30 பந்துகளில் 55 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 183.33)
இஷான் கிஷன் - 24 பந்துகளில் 38 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 158.33)
சூர்யகுமார் யாதவ் - 13 பந்துகளில் 33 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 253.85)
ஹர்திக் பாண்டியா - 23 பந்துகளில் 50 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 217.39)
திலக் வர்மா - 16 பந்துகளில் 44 ரன்கள் (ஸ்ட்ரைக் ரேட் 275.00)

இரண்டாவது சாதனை: மிகக் குறைந்த டாட் பந்துகள்

இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டர்கள் ஒட்டுமொத்தமாக 26 பந்துகளில் மட்டுமே ரன் எடுக்காமல் தவிர்த்துள்ளனர். அதாவது இந்திய இன்னிங்ஸில் வெறும் 26 டாட் பந்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன. முழுமையாக 20 ஓவர்கள் வீசப்பட்ட ஒரு டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் மிகக் குறைந்த டாட் பந்துகள் வீசப்பட்டது சாதனையாகும்.

இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் இதேபோல் 26 டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. தற்போது இந்திய அணி அந்த உலக சாதனையையும் சமன் செய்துள்ளது.

கதறிய ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் இந்த ரன் மழையைக் கட்டுப்படுத்த முடியாமல் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் கடுமையாகத் திணறினர். குறிப்பாக அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ரிச்சர்ட் என்கரவா 4 ஓவர்களில் 62 ரன்களை வாரி வழங்கினார். பிராட் எவன்ஸ் 4 ஓவர்களில் 52 ரன்களையும், பிளெஸ்ஸிங் முசரபானி 43 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.

இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி அமைத்த 84 ரன்கள் பார்ட்னர்ஷிப், இந்திய அணியின் ஸ்கோரை 256 ரன்களுக்குக் கொண்டு சென்றது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Thursday, February 26, 2026, 22:26 [IST]
Other articles published on Feb 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+