Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித்தை விட இது நல்லது! 10 ஆண்டுகளாக இந்திய அணி செய்த தவறு.. ஒரு வழியாக சரி செய்த பிசிசிஐ

மும்பை : விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தலைச் சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இருந்த போதும் ஒரு மிகப்பெரிய குறை கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது அந்த பிரச்சனைக்கு பிசிசிஐ ஒரு தீர்வு கண்டிருக்கிறது.

இந்திய அணியில் ஒரு காலத்தில் சேவாக், சச்சின், கங்குலி, யுவ்ராஜ், ரெய்னா என பல திறமை வாய்ந்த பேட்ஸ்மன்களுக்கு பந்து வீசவும் தெரியும். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஷேவாக், சச்சின்,யுவராஜ் எல்லாம் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள்.

ind vs zim shubman gill ruturaj

ஆனால் இந்த அம்சம் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இருந்த காலத்தில் முற்றிலும் இல்லாமலே போய்விட்டது. இதற்கு காரணம் சச்சின், சேவாக், கங்குலி போல் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தலைசிறந்த வீரர்களுக்கு பந்து வீசத் தெரியாதது தான். விராட் கோலி எப்போதாவது வேகப்பந்து வீசுவார். ஆனால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

எனினும் கோலி தொடர்ந்து பேட்ஸ்மேன் ஆகவே செயல்பட்டார். அணிக்கு முக்கியமான நேரத்தில் கூட சேவாக், சச்சின் பந்து வீசி இருக்கிறார்கள். ஆனால் அந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது. என்னதான் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் பந்து வீசாமல் இருந்தது மிகப்பெரிய குறையாகவே இந்திய அணிக்கு இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி சுழற் பந்து வீச தெரிந்த பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது இந்திய அணியில் இடம் பிடிக்க போட்டி அதிகமாகி விட்டதால், கூடுதலாக சுழற் பந்து வீசத் தெரிவது என்பது முக்கியமான ஒரு அம்சமாக பேட்ஸ்மேன்களுக்கு மாறிவிட்டது.

தற்போது ஜிம்பாபே அணிக்கு எதிராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு சுழற் பந்து வீசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் என மூன்று வீரர்களுமே அபாரமாக சுழற் பந்து வீசக்கூடியவர்கள். இதைத் தவிர்த்து ரவி பிஸ்னாய் என்ற ஒரு சுழற் பந்துவீச்சாளரும் இருக்கிறார்.

இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் சிறந்த அம்சமாக பார்க்கப்படுகிறது. இப்படி மூன்று பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச தெரிந்தால் அவர்களிடமே ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் வரை கேப்டன்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் இந்த விசயத்தை கைவிட்டு விடக்கூடாது என்றும், இது போல் ஆல்ரவுண்டர்களுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Sunday, July 7, 2024, 8:00 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+