Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வால் சம்பவம்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி.. தொடரை கைப்பற்றிய இந்திய அணி!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை வெறும் 15.2 ஓவர்களில் சேஸ் செய்து இந்திய அணி வென்றுள்ளது. இதன் மூலமாக டி20 தொடரையும் வென்று சாதித்துள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 4வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்துகளில் 46 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ind vs zim india zimbabwe

இதன்பின் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் ஹாட்ரிக் பவுண்டரியுடன் அதிரடியாக தொடங்க, 2வது ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். தொடர்ந்து சட்டாரா வீசிய 3வது ஓவரில் ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டினார்.

இதன் காரணமாக இந்திய அணி 4 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய இருவரால், இந்திய அணியின் ஸ்கோர் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 61 ரன்களாக இருந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் பவுண்டரியுடன் அரைசதத்தை எட்டினார். இதன்பின் சுப்மன் கில்லும் அதிரடியில் இறங்கி பொளந்து கட்டினார். அக்ரம் வீசிய 10 ஓவரில் மட்டும் சுப்மன் கில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

ஒவ்வொரு ஓவரிலும் சுப்மன் கில் - ஜெய்ஸ்வால் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பவுண்டரிகளை விளாசி தள்ளினர். இந்த நிலையில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆட்டம் கையை விட்டு போன நிலையில், பென்னட் கைகளில் பந்தை கொடுத்தார் ராசா. அந்த ஓவரில் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே பிரம்மாண்ட சிக்ஸ் ஒன்றை சுப்மன் கில் விளாசினார். பின்னர் தன் பங்கிற்கு ஜெய்ஸ்வாலும் ஸ்டம்ப் டவுன் செய்து ஒரு சிக்சரை விளாசினார்.

தொடர்ந்து அடுத்த பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் ஜெய்ஸ்வால். இறுதியாக 15.2 ஓவர்களில் இந்திய அணி 156 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 2 சிக்ஸ், 13 பவுண்டரியும், சுப்மன் கில் 39 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 58 ரன்களும் விளாசினர்.

Story first published: Saturday, July 13, 2024, 19:31 [IST]
Other articles published on Jul 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+