Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோலியை முடித்த முகேஷ் குமார்.. 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆல் அவுட்.. சுப்மன் கில் முதல் சம்பவம்!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த முகேஷ் குமார் 3.3 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 4 சிக்ஸ் உட்பட 58 ரன்களை விளாசினார்.

ind vs zim india Sanju Samson

இதன்பின் ஜிம்பாப்வே அணியின் வெஸ்லி - மருமாணி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முகேஷ் குமார் வீசிய ஓவரிலேயே வெஸ்லி டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் பென்னட் களம் புகுந்தார். தொடர்ந்து துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 13 ரன்கள் விளாசப்பட, முகேஷ் குமார் பவுலிங்கில் பென்னட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மையர்ஸ் - மருமாணி கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 47 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் 8வது ஓவரை வீச வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே மருமாணி 27 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மையர்ஸ் அதிரடியை கையில் எடுத்தார்.

ஆனால் அவரும் சிவம் துபேவை அட்டாக் செய்ய முயன்று 34 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் சிக்கந்தர் ராசாவும் சிவம் துபேவின் அசத்தல் த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கியது. பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அக்ரம் சில சிக்சர்களை அதிரடியாக விளாசினார்.

ஆனால் அவரும் முகேஷ் குமாரிடம் 13 பந்துகளில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், சிவம் துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலமாக இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.

Story first published: Sunday, July 14, 2024, 20:01 [IST]
Other articles published on Jul 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+