Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற இந்தியா.. கலீல் அஹ்மத் நீக்கம்.. அறிமுகமான தமிழக வீரர்.. சுப்மன் கில் ட்விஸ்ட்!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் டி20 உலகக்கோப்பை சாம்பியனான அடுத்த போட்டியிலேயே இப்படியா தோல்வியை சந்திப்பது என்று விமர்சனங்கள் எழுந்தன.

ind vs zim india zimbabwe

இந்த நிலையில் அடுத்த நாளே ஜிம்பாப்வே அணிக்கு பதிலடி கொடுக்க இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியால் வெற்றிகரமாக சேஸிங்கை செய்ய முடியவில்லை. இதனால் அடுத்த நாளிலேயே சுப்மன் கில் முடிவு மாற்றப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற பின் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், முதல் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இந்த பிட்சில் எந்த மாற்றமும் இருக்காது என்று நினைக்கிறேன். இதனால் பேட்டிங் செய்வதற்கு நல்ல வாய்ப்பாக கருதுகிறேன். பேட்டிங்கில் முன்னேற்ற அடைய வேண்டிய தேவை உள்ளது. இந்த போட்டியில் கலீல் அஹ்மத் நீக்கப்பட்டு தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேசுகையில், சம்மர் பிட்ச் போல் காணப்படுகிறது. இதனால் ஆட்டம் செல்ல செல்ல பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். நாங்களும் முதலில் பவுலிங் செய்யவே நினைத்தோம். ஓய்வறையில் வீரர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். எங்களின் கவனம் ஒரு போட்டியில் மட்டுமே உள்ளது. பாராட்டுகள் மகிழ்ச்சியை அளிக்கிறது. சட்டாரா சிறப்பாக செயல்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, July 7, 2024, 16:23 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+