கம்பீர் கிடையாது.. ஜிம்பாப்வே தொடரில் இவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்
ஹராரே: டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு அடுத்தடுத்து டி20 தொடரை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. குறிப்பாக கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்றது.
இந்த சூழலில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்சி 19 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியா 13.2 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்பிருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்கள். மேலும் பிளேயிங் லெவனும் சிறப்பான முறையில் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்த தருணத்தில் தான் பயிற்சியாளராக இந்த தொடரில் லக்ஷ்மன் பணியாற்று இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து தொடரில் கம்பீர் செயல்பட்ட நிலையில் அவருக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக அவர் இந்தியா திரும்பிவிட்டார்.
இதனால் அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் அணியை சிறப்பாக வழிகாட்டி இருக்கிறார். இது போட்டியிலே பார்க்கும் போது தெரிந்தது. இந்திய பவுலர்கள் சரியான முறையில் பந்து வீசி விக்கெட்டுகள் எடுத்தனர். இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் கம்பீர் அணியில் பல தவறுகளை செய்ததாகவும், ஆனால் பயிற்சியாளராக லக்ஷ்மன் பணியாற்றிய பிறகு அணி வெற்றி பாதைக்கு திரும்பி இருப்பதாகவும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதனால் குறைந்தபட்சம் t20 போட்டிக்காவது லக்ஷ்மன் இனி பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் கம்பீரை நீக்கிவிட்டு லக்ஷ்மணே பயிற்சியாளராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து இதுபோல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்தடுத்து நடந்து வந்தால் இதுபோன்று பயிற்சியாளராக லக்ஷ்மன் பலமுறை செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

