Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை.. ஸ்ட்ரைக் ரேட்டில் உச்சம் தொட்ட ரிங்கு சிங்

ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் இந்திய அணியின் "ஃபினிஷர் ரிங்கு சிங்". 22 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணியை கதிகலங்க வைத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 218 ஆக இருந்தது.

இந்த நிலையில் ரிங்கு சிங்கின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த சாதனை ஒன்று வெளியாகி உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களிலேயே 16 வது ஓவர் முதல் 20 வது ஓவர்கள் வரையிலான டெத் ஓவர்கள் எனப்படும் கடைசி ஐந்து ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியலில் ரிங்கு சிங் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

IND vs ZIM india zimbabwe


கடைசி 5 ஓவர்களில் குறைந்தது 250 ரன்கள் குவித்த வீரர்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தபோது, அதில் அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ள வீரர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 228 ஆக உள்ளது.

அடுத்த இடத்தில் ரிங்கு சிங் இடம் பெற்று இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 221.5 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா (201), நான்காவது இடத்தில் விராட் கோலி (192) மற்றும் ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங் (180) ஆகியோர் உள்ளனர். இதை அடுத்து மிக குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர் என்ற அடையாளத்தை நிரூபித்து இருக்கிறார் ரிங்கு சிங்.

கடந்த போட்டியில் டக் அவுட் ஆகி இருந்த அவர், இரண்டாவது போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் அவர் நான்கு சிக்ஸ் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியலில் கடந்த தலைமுறையைச் சேர்ந்த வீரர்களில் யுவராஜ் சிங் மட்டுமே இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர் என கூறப்படும் தோனி இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெறாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தலாம்.

ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலை எடுத்து பார்க்கும் போது அதில் விராட் கோலி 1032 ரன்கள் உடன் முதல் இடத்திலும், தோனி 1014 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். தோனி கடைசி ஐந்து ஓவர்களில் குவித்த ரன்களின் ஸ்ட்ரைக் ரேட் 152 மட்டுமே. அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும், அவர் அதிக ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 7, 2024, 22:59 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+