Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீரர்களை பார்த்து களத்தில் கத்தும் கேப்டன் வேண்டாம்.. ரோகித் சர்மாவை மறைமுகமாக தாக்கிய இளம் வீரர்

மும்பை: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி,ரோகித் சர்மா ஜடேஜா ஆகியோர் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜிம்பாப்வே தொடரில் சூரியகுமார், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களும் இந்த தொடரில் இருந்து மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

ind vs zim india cricket team riyan parag

இதனால் முழுக்க முழுக்க இளம் வீரர்கள் கொண்ட அணியின் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தொடரில் ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்ட ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சஞ்சு சாம்சனை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

நானும் சாம்சனும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் இன்னும் நாங்கள் நெருங்கி பழகி இருக்கின்றோம். நான் அவரைப் பார்த்து ஒரு விஷயங்கள் கற்றுக் கொண்டேன். பவுலர்கள் குறித்தும் பில்டர்கள் எப்படி நிறுத்த வைப்பது என்பது குறித்தும் சாம்சன் உடன் பேசி இருக்கிறேன். இதன் மூலம் கேப்டன் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியும்போது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

மேலும் சில போட்டிகளில் நெருக்கடியான சூழலில் எனக்கு சஞ்சு சாம்சன் பந்து வீச வாய்ப்பு வழங்கினார். தற்போது காலகட்டத்தில் சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார். விக்கெட் கீப்பிங் திறமை பலராலும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. களத்தில் சஞ்சு சாம்சனுடன் இருக்கும் போது பல விஷயங்கள் நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம்.

களத்தில் கோபமாக இருக்கும்போது கூட அவர் பெரிய அளவில் யாரையும் திட்ட மாட்டார். மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பார். போட்டியில் தோற்றுப் பிறகும் அவர் நடந்து கொள்ளும் விதம் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கேப்டன் மீது நாமும் நம்பிக்கை பெறுகிறோம். சில கேப்டன்கள் களத்தில் எப்போதும் கோபமாக இருப்பார்கள். மற்ற வீரர்களை திட்டி கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

அப்படிப்பட்ட கேப்டன் கீழ் யாரும் விளையாட விரும்ப மாட்டார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் போட்டியில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி அவர் எப்போதும் போல் நார்மலாக தான் இருப்பார். இதுதான் ஒரு கேப்டனுக்கான சிறந்த தகுதியாக நான் நினைக்கிறேன் என்று ரியான் பராக் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரோகித் சர்மா தான் களத்தில் வீரர்களை திட்டிக் கொண்டிருந்தார். இதனை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ரியான் பராக் பேசியிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, July 2, 2024, 22:22 [IST]
Other articles published on Jul 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+