Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசரடிக்கும் ருதுராஜ் கன்சிஸ்டன்சி.. சுப்மன் கில் அருகில் கூட வர முடியாது.. இந்திய அணியில் இடம் உறுதி

ஹராரே: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்று 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி உள்ளிட்டோர் டாப் ஆர்டரில் விளையாடி வந்ததால், ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினமாக பார்க்கப்பட்டது.

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில், இஷான் கிஷன், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்கம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது திறமையை நிரூபிக்க, டி20 உலகக்கோப்பைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடி வந்த ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.

ind vs zim india zimbabwe

இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களில் யார் எந்த இடத்தை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே தொடக்க வீரர்களுக்கான போட்டியில் உள்ள சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 4 பேரையும் ஜிம்பாப்வே டி20 தொடருக்கு இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்தது.

இதில் அபிஷேக் சர்மா சதம் விளாசி கவனத்தை ஈர்த்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்-ன் ஆட்டம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. எந்த நேரத்தில் அட்டாக் செய்ய வேண்டும், எந்த பவுலரை அட்டாக் செய்ய வேண்டும், ஸ்பின்னர்களை வெளுக்கும் திறமை, ஃபீல்டிற்கு ஏற்ப பேட்டிங் செய்வது என்று ருதுராஜ் கெய்க்வாட் முதிர்ச்சியான பேட்ஸ்மேனாக களத்தில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் கன்சிஸ்டன்சி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இந்திய டி20 அணிக்காக விளையாடிய கடைசி 7 போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 356 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் காரணமாகவே ருதுராஜ் கெய்க்வாட் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நம்பர் 7 இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

மறுபுறம் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் கன்சிஸ்டன்சி பிரச்சனையில் மீண்டும் சிக்கியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், நேற்றைய ஆட்டத்தில் 47 பந்துகளில் 66 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் சுப்மன் கில்லின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த பேச்சுகள் எழுந்தன. இதனால் இலங்கை டி20 தொடருக்கான தொடக்க வீரர்கள் ரேஸில் ருதுராஜ் கெய்க்வாட் முன்னிலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, July 11, 2024, 14:21 [IST]
Other articles published on Jul 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+