Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND v ZIM -இந்திய அணியிலிருந்து சாம்சன், சிவம் துபே நீக்கம்..தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றிய நிலையில் தற்போது ஜிம்பாப்வேக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க செல்கிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த அணியில் சஞ்சு சாம்சன் சிவம் தூபே ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தார்கள். ஆனால் தற்போது இந்த மூன்று வீரர்களையும் பிசிசிஐ அதிரடியாக நீக்கி இருக்கிறது.

ind vs zim india cricket team india squad

இதற்கு காரணம் t20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படாசில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் பார்படாசில் உள்ள ஹோட்டலில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

இதனால் இந்த அணியில் இருக்கும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தற்போது ஜிம்பாப்வேக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்தியா, ஜிம்பாப்வே தொடர் வரும் ஆறாம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. இதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் இந்த மூன்று வீரர்களும் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இந்தியாவில் உலகக்கோப்பை வென்ற வீரர்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற இருக்கிறது. இதற்கு இந்த மூன்று வீரர்களும் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதன் காரணமாக தான் பிசிசிஐ தற்போது இந்த மாற்று ஏற்பாடு செய்திருக்கிறது. இதன்படி தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனுக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ind vs zim india cricket team india squad

சாய் சுதர்சன் தொடக்க வீரராக சிறப்பாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று விக்கெட் கீப்பர் ஜித்தேஸ் சர்மா மற்றும் வேக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கும் ஜிம்பாப்வே தொடரில் மாற்று வீரர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தொடருக்கு தமிழக வீரர் முதலில் பரிந்துரை செய்யப்படாத நிலையில் தற்போது மீண்டும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Story first published: Tuesday, July 2, 2024, 15:23 [IST]
Other articles published on Jul 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+