ஹராரே : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஒரு போட்டி கூட களமிறங்கவில்லை. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடினார்.
சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்த வீரர் என்றால், அவருக்கு தமிழ் நன்றாக தெரியும். இதன் காரணமாக அணியில் இருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர்களுடன் சாம்சன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் சஞ்சு சாம்சனுக்கு இன்றைய ஆட்டத்தில் புதிய பொறுப்பும் கிடைத்தது. இந்திய டி20 அணியின் துணை கேப்டன் என்ற பொறுப்புடன் சஞ்சு சாம்சன் இன்று விளையாடினார். கேப்டனாக கில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளையாடியதால் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த பொறுப்பை அவர் சிறப்பாக கையாண்டார். விக்கெட் கீப்பர் என்பதால் சஞ்சு சாம்சன் தான் ஃபீலிங்கை சரியாக செட் செய்தார். இதில் பவுண்டரி லைன் அருகே இருந்ததால் அவரால் பில்டிங்கை கண்காணிக்க முடியவில்லை.இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தன்னுடைய பொறுப்பை எடுத்துக்கொண்டு பில்டிங்கை நிறுத்தினார்.
ஒரு கட்டத்தில் பவுலர்களையும் சஞ்சு சாம்சன் தான் அழைத்து வீச சொன்னார். சஞ்சு சாம்சன் அருகே வாஷிங்டன் சுந்தர் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சஞ்சு சாம்சன், டேய் டைம் ஆகுது சீக்கிரம் வா டா என்று தமிழில் பேசி வாஷிங்டன் சுந்தரை பந்து வீச அழைத்தார். அது மட்டுமில்லாமல் வாஷிங்டன் சுந்தருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்றும் தமிழில் சில ஐடியாகளையும் சாம்சன் கொடுத்தார்.
சுழற் பந்துவீச்சாளர்களுக்கு தோனி ஹிந்தியில் ஐடியா கொடுத்து நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது கேரள வீரனான சாம்சன் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு தமிழில் பேசி ஐடியா கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பேட்டிங்கில் விளையாட பெரிய வாய்ப்பு சாம்சனுக்கு இல்லாத நிலையில், துணை கேப்டனாக தன் பதவியை சிறப்பாக செய்தார். இதேபோன்று கில்லும் கொஞ்சம் கூட ஈகோ இன்றி சஞ்சு சாம்சனுக்கு இந்த பொறுப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.