இவ்வளவு ரன்கள் அடிப்போம் என நினைக்கவே இல்லை.. இந்த 2 பேரும் பிண்ணிட்டாங்க.. ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய t20 அணியின் கேப்டனாக பதவி ஏற்ற பிறகு ஸ்ரேயாஸ் வெல்லும் முதல் தொடர் இதுவாகும்.
முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி இணைந்தது வெற்றிக்கு பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "நாங்கள் இன்று வெற்றி பெற்ற விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது."

"இது உண்மையிலே ஒரு முழுமையான வெற்றி ஒவ்வொரு வீரர்களும் சிறந்த முறையில் பங்காற்றினார்கள். பேட்டிங்கில் தொடங்கினால் இசான் கிஷன், திலக் வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். இருவரும் ஆடிய சில ஷாட்கள் மிகவும் பிரமாதமாக இருந்தது. அது கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்தது."
"நான் ஒரு 180 முதல் 200 ரன்கள் எடுத்தால் இந்த ஆடுகளத்திற்கு நல்ல இலக்கு என்று நினைத்தேன். ஆனால் எங்கள் அணி வீரர்கள் 220 என்ற இலக்கை நிர்ணயித்தார்கள். அது உண்மையிலே கேக்கில் இருக்கும் செர்ரி போல் இருந்தது. இருவரும் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்கள். பந்து வீச்சிலும் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்."
"தங்களுடைய திட்டத்தை அருமையாக களத்தில் நடைமுறைப்படுத்தினார்கள். இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 132 ரன்கள் எல்லாம் நாங்கள் சுருட்டி விட்டோம். இந்தப் போட்டியின் முடிவே எங்களுடைய வெற்றியின் கதை குறித்து சொல்லி இருக்கும். எங்கள் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் போட்டியை எவ்வாறு எதிர்நோக்கி இருக்கிறார்கள்."
"ஒவ்வொரு எப்படி களத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி அமையும் தவிர இதற்கு முன்பு நாம் என்ன செய்தோம் என்பது குறித்து இருக்காது. நாங்கள் அடுத்ததாக முன்னோக்கி செல்ல வேண்டும் அதுதான் முக்கியம். நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாளை இன்னொரு வாய்ப்பு இருக்கின்றது. அதையும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன்."
"கடைசி போட்டியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்கவில்லை. அது குறித்து இன்னும் நான் பயிற்சியாளரிடம் பேசவில்லை. எங்கள் அணியின் பிரின்ஸ் யாதவ் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடைசி போட்டியில் நிச்சயம் இரண்டு மாற்றம் இருக்கும்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்


Click it and Unblock the Notifications

