எங்க வீரர்களுக்கு பயமே கிடையாது.. நான் அவங்களுக்கு எந்த பிரச்சினையும் வர விடமாட்டேன்- ஸ்ரேயாஸ்
ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, கேப்டனாக தனது முதல் வெற்றி மற்றும் முதல் தொடர் வெற்றி குறித்தும், அணியின் செயல்பாடு குறித்தும் கேப்டன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். டி20 உலககோப்பையை வென்ற பிறகு இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இந்த இக்கட்டான சூழலில் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியை இந்திய அணி 3க்கு0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. அணியில் உள்ள இளம் வீரர்களின் அச்சமற்ற ஆட்டம் மற்றும் தளர்வில்லா ஆற்றல் குறித்துப் பேசிய அவர், "அவர்கள் எவ்வளவு பயமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோம்."

"அவர்கள் களத்தில் அபார ஆற்றலையும், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வரும் இளம் வீரர்கள் குழுவாக இருக்கிறார்கள். குறிப்பாக, அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடும்போது இத்தகைய ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம். ஒரு கேப்டனாகவும் ஒரு அணியாகவும் எனக்குத் தேவைப்படும் ஆற்றலை அவர்கள் இன்றைய போட்டியிலும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினர். ஜிம்பாப்வே மண்ணில் இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது எனக்கு ஒரு சிறப்பான உணர்வைத் தந்துள்ளது. இது ஒரு மிகச்சிறப்பான தருணமாக அமையும்" என்றார்.
"ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதால் தற்போதைய வீரர்கள் பலருக்கும் ஏற்கனவே நல்ல அனுபவம் உள்ளது. அனுபவத்தைப் பொறுத்தவரை, நானும் மற்ற வீரர்களைப் போலவே கிட்டத்தட்ட 55 முதல் 60 போட்டிகளில் தான் விளையாடியுள்ளேன். அவர்கள் அனைவரும் அசாத்திய திறமை படைத்தவர்கள். அவர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது ஒட்டுமொத்த அணிக்கும் பலன் தரும்" என்று குறிப்பிட்டார்.
"நான் ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் நுழையும்போதும், இளம் வீரர்கள் எந்தவித பதற்றமும் இன்றி, மிகவும் நிம்மதியாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்யவே முயற்சிப்பேன். ஏனெனில், வீரர்கள் தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது தான் அவர்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்" என்று அவர் ' கூறினார்.


Click it and Unblock the Notifications

