Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM - சுப்மன் கில் கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வரவே மாட்டாரு! தோனியின் தேர்வை ஃபாலோ பண்ணுங்க

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள்.இதனால் முற்றிலும் புதிய வீரர்களை வைத்து ஜிம்பாப்வேக்கு சென்று இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிருப்பது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. இந்த சூழலில் பிசிசிஐ மிகப்பெரிய தவறு செய்வதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ind vs zim shubman gill ruturaj

சிறப்பாக விளையாடும் கில் போன்ற பேட்ஸ்மேனுக்கு தேவையில்லாமல் கேப்டன்சி பதவி கொடுத்து நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படித்தான் விராட் கோலி கேப்டனாக மாற்றி இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையும் வெல்ல முடியாமல் இருந்தது. தற்போது அதே தவறை மீண்டும் பிசிசிஐ செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்வதை விட, அணிக்கான சிறந்த கேப்டனை தேர்வு செய்வது தான் சரியான முடிவாக இருக்கும். இந்திய t20 அணிக்கு புதிய கேப்டனாக வரும் தகுதி தற்போது உள்ள அணியில் ருதுராஜ்க்கு மட்டும் தான் இருக்கிறது. அவர் தன்னுடைய திறமையை சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆக வெளிப்படுத்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் விஜய் ஹசாரே, சையது முஸ்தாக் அலி போன்ற தொடர்களில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். ஆனால் கில் பெரிய அளவில் கேப்டனாக இருந்ததில்லை. அண்மையில் குஜராத் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டு, அந்த அணி தோல்வியை தழுவியது.
கேப்டன்ஷி நெருக்கடியால் சுப்மன் கில் தன்னுடைய பேட்டிங்கிலும் தடுமாறி வருகிறார்.

இதனால் மீண்டும் அதே தவறை செய்யாமல் கில்லுக்கு பதிலாக ருதுராஜை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த தொடரில் கில் ஒரு வேலை இதில் மோசமாக செயல்பட்டு தொடரை இழந்தால், நிச்சயம் அது அவருடைய பேட்டிங்கை பாதிக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனால் கேப்டன்சி விஷயத்தில் தேர்வு குழுவும்,பிசிசியயும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, July 7, 2024, 7:30 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+