Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு.. சுப்மன் கில் சகோதரியுடன் ஊர் சுற்றிய ரிங்கு சிங்.. என்ன நடக்கிறது?

ஹராரே: இந்திய டி20 அணியின் கேப்டன் சுப்மன் கில் சகோதரி ஷானில் கில்லுடன் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் ஊர் சுற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஷானில் கில் பிரபலமாக இருந்து வரும் நிலையில், ரிங்கு சிங்குடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும், அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக கம்பேக் கொடுத்து வெற்றிபெற்றது. இந்த டி20 தொடரில் ரிங்கு சிங் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ind vs zim india zimbabwe

டி20 உலகக்கோப்பை தொடரின் போது ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார். இதனால் இந்திய அணியின் முக்கியத்துவம் ரிங்கு சிங்கிற்கு அளிக்கப்படவில்லை என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிங்கு சிங் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் சிவம் துபேவின் தேர்வு சரியே என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதன்பின் ஆடிய 2வது டி20 போட்டியில் ரிங்கு சிங் கடைசி நேரத்தில் களமிறங்கி 22 பந்துகளில் 48 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் மீண்டும் தனது ஃபினிஷிங் திறமையை ரிங்கு சிங் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பாராட்டினர். இந்த நிலையில் 2வது டி20 போட்டிக்கு பின் ரிங்கு சிங் தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில்லின் சகோதரி ஷானில் கில். சுப்மன் கில் விளையாடும் போட்டிகளில் தவறாமல் இடம்பெறும் ஷானில் கில்லை பின் தொடர்பவர்கள் ஏராளம் உள்ளனர். இவர் ஏற்கனவே சுப்மன் கில்லின் காதலி என்று சொல்லப்பட்டு வரும் சாரா டெண்டுல்கருடன் நெருங்கிய நட்பில் இருப்பவர். அதேபோல் கேகேஆர் மற்றும் குஜராத் அணி வீரர்களுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிம்பாப்வேவில் உள்ள இவர், இந்திய அணியின் ரிங்கு சிங்குடன் ஊர் சுற்றிய சம்பவம் தெரிய வந்துள்ளது. ஜிம்பாப்வேயில் ஊர் சுற்றிய போது எடுத்த வீடியோவை ஷானில் கில் இன்ஸ்டாகிராமில் வெளியிட, ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. இதன்பின் திடீரென அந்த வீடியோவை ஷானில் கில் அழித்துள்ளார். இதனால் இருவரும் காதலித்து வருகின்றனரா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

Story first published: Friday, July 12, 2024, 12:50 [IST]
Other articles published on Jul 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+