Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க வீரர்கள் எல்லாம் சின்ன பசங்க.. இன்னும் நிறைய தொடர் வேண்டும்.. ஜிம்பாப்வே கேப்டன் ராசா கருத்து

ஹராரே: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு, இந்தப் போட்டிகள் ஒருதலைப்பட்சமாக இருக்காது என்று ஜிம்பாப்வே அணி கேப்டன் ஷிக்கந்தர் ராசா கூறி இருந்தார்.

ஆனால் , தற்போது ஜிம்பாப்வே அணி டி20 தொடரில் 3க்கு0 என்ற கணக்கில் ஓயிட்வாஷ் ஆனது. இது குறித்து பேசிய ஜிம்பாப்வே கேப்டன் ஷிக்கந்தர் ராசா, முன்னணி கிரிக்கெட் நாடுகளுடன் தொடர்ந்து விளையாடுவது மட்டுமே தங்களைப் போன்ற அணிகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று ஜிம்பாப்வே கேப்டன் குறிப்பிட்டுள்ளார்.

Sikandar raza

"உலகத்தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக விளையாடாதவரை எங்களால் ஒரு நாடாக வளர்ச்சி பெற முடியாது. அனைத்து நாடுகளும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும்போதுதான் சர்வதேச கிரிக்கெட் மேலும் சுவாரசியமாக மாறும்" என்றார்.

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி 102 மீட்டர் தூர சிக்சர் விளாசி அபாரம்.. ஜிம்பாப்வே மண்ணில் பட்டாசு

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி 102 மீட்டர் தூர சிக்சர் விளாசி அபாரம்.. ஜிம்பாப்வே மண்ணில் பட்டாசு

அணியில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, நியாமூரி அணியில் இணைந்தது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது என்றும், 6 மற்றும் 7-வது வரிசை ஆட்டக்காரராக மருமானி (Marumani) தனது பொறுப்பைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார். மாதேவேரேவும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை வழங்கி வருவதாகக் கூறினார்.

அணியின் புதிய கலாச்சாரம் குறித்துப் பேசிய அவர், "எங்கள் பயணம் நீண்ட நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. Dressing room-ல் ஒருவருக்கொருவர் வெற்றிகளிலும் தோல்விகளிலும் உறுதுணையாக இருக்கும் சூழலை உருவாக்க விரும்பினோம். களத்தில் ஒவ்வொரு பந்தையும் முழு அர்ப்பணிப்போடும் நோக்கத்தோடும் எதிர்கொள்ள பழகியுள்ளோம்."

"சில போட்டிகளில் தோல்விகள் கிடைக்கலாம், அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டின் தரத்திற்கு இணையாக எங்களது திறமை உயரும்போது, ஜிம்பாப்வே அணி நிச்சயம் ஒரு வல்லமைமிக்க அணியாக உருவெடுக்கும்" என்று தெரிவித்தார்.

எங்க வீரர்களுக்கு பயமே கிடையாது.. நான் அவங்களுக்கு எந்த பிரச்சினையும் வர விடமாட்டேன்- ஸ்ரேயாஸ்

எங்க வீரர்களுக்கு பயமே கிடையாது.. நான் அவங்களுக்கு எந்த பிரச்சினையும் வர விடமாட்டேன்- ஸ்ரேயாஸ்

"அடுத்த தொடருக்கு முன்பாக எனக்கான ரன்களை நான் பேட்டிங்கில் குவிக்க வேண்டும் என்பதே எனது முதல் இலக்காக இருக்கும். எனது பங்களிப்பு இல்லாமலேயே அணி வீரர்கள் களத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ஆனால் ஒரு தலைவனாக முன்னின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. பேட்டிங்கில் நான் பங்களிக்கத் தொடங்கும்போது, அது அணியின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமையும். அந்த ரன்கள் விரைவில் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

Story first published: Sunday, July 26, 2026, 21:37 [IST]
Other articles published on Jul 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+