Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: இந்திய அணி ஜெர்சியில் நடந்த தவறு.. ஒரு நட்சத்திரம் மட்டும் ஏன்? காரணம் இதுதான்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் களம் இறங்கியது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி ஜிம்பாப்வே-வில் உள்ள ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்களின் உடையில் ஒரு நட்சத்திரம் மட்டுமே இடம்பெற்று இருந்தது.

கிரிக்கெட் வீரர்களின் உடையில் இடம் பெறும் நட்சத்திரம் என்பது, அவர்கள் எந்த போட்டியை விளையாடுகிறார்களோ அதில் அந்த அணி எத்தனை உலகக் கோப்பை வென்றது என்பதை சுட்டிக் காட்டுவதாகும். அந்த வகையில், இந்திய அணி டி20 போட்டிகளில் 2007 மற்றும் 2024 என இரண்டு முறை உலகக் கோப்பை வென்றிருக்கிறது. அதன்படி, இந்திய அணி டி20 தொடரில் ஆடும் போது அணியும் உடையில் இரண்டு நட்சத்திரம் இடம்பெற வேண்டும்.

IND vs ZIM india zimbabwe

ஆனால், ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய இந்திய வீரர்களின் உடையில் ஒரு நட்சத்திரம் மட்டுமே இடம் பெற்று இருந்தது. இது குறித்து சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். ஏன் இந்திய அணி 2 நட்சத்திரங்களை அதில் இடம்பெறச் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினர். டி20 உலகக் கோப்பை நடந்து முடிந்த சில தினங்களில் ஜிம்பாப்வே தொடர் தொடங்கியது தான் இதற்கு முக்கிய காரணம்.

இந்த தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை முடிந்த இரண்டு நாட்களில் ஜிம்பாப்வே-வுக்கு பயணம் செய்தது. எனவே, இந்திய அணி உலகக் கோப்பை வென்ற அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஜிம்பாப்வே தொடருக்கான உடையில் மாற்றம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

அதனால், இந்த தொடருக்கு மட்டும் இந்திய அணி ஒரு நட்சத்திரம் கொண்ட உடையை அணிய உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Saturday, July 6, 2024, 18:56 [IST]
Other articles published on Jul 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+