Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிங்கு சிங் ஏன் சிறந்த ஃபினிஷர்? தெறிக்க விடும் சிக்ஸ் ரெக்கார்டு.. தோனியை விட 5 மடங்கு அதிகம்

ஹராரே: இந்திய டி20 அணியின் ஃபினிஷர் ஆக அறியப்படும் ரிங்கு சிங்கின் மிரள வைக்கும் சிக்ஸ் சாதனை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தோனியை விட ஐந்து மடங்கு குறைந்த பந்துகளில் அவருக்கு இணையாக சிக்ஸர்களை அடித்து இருக்கிறார் ரிங்கு சிங்.

கடந்த 2024 ஐபிஎல் தொடரில் சரியாக ரன் குவிக்காததால் விமர்சனத்தை சந்தித்தார் ரிங்கு சிங். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்திருந்தார். ஆனால், இரண்டாவது போட்டியில் 22 பந்துகளில் 48 ரன்கள் குவித்து தனது ஃபார்மை நிரூபித்து இருந்தார்.

IND vs ZIM india Rinku Singh

இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் நான்கு சிக்ஸர்களை அடித்து இருந்தார். இதன் மூலம், அவர் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி இரண்டு ஓவர்களில் 48 பந்துகளை மட்டுமே சந்தித்து இருக்கிறார் ரிங்கு சிங். அதில் 17 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். அதாவது, மூன்று பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் அடித்து இருக்கிறார். இதுவே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனைப் பட்டியலில் மற்றும் ஒரு ஆச்சரியமும் உள்ளது.

கடைசி இரண்டு ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா 193 பந்துகளில் 32 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி 158 பந்துகளில் 24 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருக்கும் தோனி 258 பந்துகளில் 19 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

இதுவரை சிறந்த ஃபினிஷர்கள் என கூறப்பட்டு வரும் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியாவை விட அதிவேகமாக சிக்ஸ் அடித்து இருக்கிறார் ரிங்கு சிங். தோனி 258 பந்துகளில் 19 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து இருக்கிறார். மறுபுறம் ரிங்கு சிங் 48 பந்துகளில் 17 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இதை ஒப்பிட்டு பார்த்தால் கிட்டத்தட்ட தோனியை விட 5 மடங்கு குறைந்த பந்துகளில் அவருக்கு இணையாக சிக்ஸ் அடித்து இருக்கிறார் ரிங்கு சிங்.

ரிங்கு சிங் கடைசி இரண்டு ஓவர்களில் 258 பந்துகளை சந்திக்கும் போது தோனியை விட ஐந்து மடங்கு அதிக சிக்ஸர்கள் அடித்திருப்பார் என நாம் எதிர்பார்க்கலாம். அதேபோல, ஹர்திக் பாண்டியா 193 பந்துகளில் 32 சிக்ஸ் அடித்து இருக்கிறார். அவரை விட நான்கு மடங்கு குறைந்த பந்துகளில், அவர் அடித்ததில் பாதி சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர் என இப்போதே நிரூபித்து இருக்கிறார் ரிங்கு சிங்.

Story first published: Tuesday, July 9, 2024, 11:23 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+