For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வலிமையாகும் ருதுராஜ்.. கன்சிஸ்டன்சி இல்லாமல் சுப்மன் கில்லுக்கு சிக்கல்.. இலங்கை தொடரில் ட்விஸ்ட்!

ஹராரே: ஜிம்பாப்வே தொடரில் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கன்சிஸ்டன்சி காரணமாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் 4 தொடக்க வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அபிஷேக் சர்மாவின் ஆட்டமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில்லின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 3வது டி20 போட்டியில் சுப்மன் கில் 48 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

ind vs zim india zimbabwe

ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் ஓரம்கட்ட நிலையில், ஜிம்பாப்வே டி20 தொடரிலும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. ஆனால் மறுமுனையில் நிற்கும் ருதுராஜ் கெய்க்வாட் கன்சிஸ்டன்சியாக ரன்களை சேர்த்து வருகிறார். முதல் போட்டியில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், அடுத்த போட்டியில் 77 ரன்களும், 3வது டி20 போட்டியில் 49 ரன்களையும் சேர்த்தார்.

இந்திய அணிக்காக விளையாடிய கடைசி 7 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 356 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் பெயர் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கவுதம் கம்பீர் 3 வடிவங்களுக்கான வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சில காலமாகவே பேசி வருகிறார்.

அதேபோல் இந்திய அணியில் தொடக்க வீரர்கள் இடதுகை மற்றும் வலதுகைன் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கூட்டணியை இலங்கை டி20 தொடரில் பரிசோதித்து பார்க்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் தேர்வு செய்யப்படுவாரா என்பதே சந்தேகம் தான்.

ஏனென்றால் ஜெய்ஸ்வாலுக்கான பேக் அப் வீரராக அபிஷேக் சர்மா உருவாகியுள்ளார். அவருக்கு இன்னும் சில டி20 தொடர்களில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரின் சாதகம் மற்றும் பாதகங்களை அறிய இந்திய அணி நிர்வாகம் முடிவெடித்திருக்கிறது. இதனால் டி20 கிரிக்கெட் பக்கம் சுப்மன் கில் வர வேண்டும் என்றால், அடுத்த 2 போட்டிகளில் அசாத்திய இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, July 12, 2024, 15:10 [IST]
Other articles published on Jul 12, 2024
English summary
IND vs ZIM: Why Ruturaj Gaikwad is better than Shubman Gill in T20 Cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+