Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: 4 விக்கெட்ஸ், 2 மெய்டன், 17 டாட் பால்கள்.. ஜிம்பாப்வே அணியை பதற வைத்த இந்திய ஸ்பின்னர்!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 4 ஓவர்களில் 2 மெய்டன் உட்பட 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் ரியான் பராக், அபிஷேக் சர்மா மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய மூவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்காக வெஸ்லி - இன்னசண்ட் கையா இருவரும் தொடக்கம் கொடுத்தனர்.

t20 world cup IND vs ZIM Shubman Gill

கலீல் அஹ்மத் வீசிய முதல் ஓவரில் 6 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே கையா இன்சைட் எட்ஜாகி ஸ்டம்புகள் பறக்க டவுட் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் இணைந்த வெஸ்லி - பென்னட் இருவரும் பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேர்க்க தொடங்கினர். கலீல் வீசிய 5வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள் உட்பட 17 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் பவர் பிளேவின் கடைசி ஓவரில் ரவி பிஷ்னாய் அட்டாக்கில் வந்தார்.

அவர் வீசிய முதல் பந்திலேயே பென்னட் 23 ரன்கள் எடுத்து வெளியேற, ஆட்டத்தில் இந்தியாவின் கைகள் ஓங்கியது. அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கப்படவில்லை. மீண்டும் ரவி பிஷ்னாய் வீசிய 8வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான வெஸ்லி 21 ரன்கள் எடுத்து வெளியேற, ஜிம்பாப்வே அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்களை சேர்த்திருந்தது. அனுபவ வீரர் சிக்கந்தர் ராசா அதிரடியாக சிக்ஸ் அடித்து ரன்கள் சேர்த்த நிலையில், ஆவேஷ் கானை அட்டாக் செய்ய முயற்சித்து 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அடுத்த பந்திலேயே ஜானத்தன் கேம்பெல் ரன் அவுட்டாக, ஜிம்பாப்வே அணி சிக்கலில் சிக்கியது. பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் சுழலில் மையர்ஸ் 23 ரன்களிலும், மசகட்ஷா டக் அவுட்டாகியும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். பின்னர் ரவி பிஷ்னாய் வீசிய 16வது ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஜிம்பாப்வே அணி 90 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. கடைசி நேரத்தில் மடான்டே அதிரடியாக 29 ரன்களை விளாச, 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Saturday, July 6, 2024, 18:19 [IST]
Other articles published on Jul 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+