Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND W Vs AUS W: மகளிர் டி20 உலககோப்பை வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா பேட்டிங்..அணியில் ஒரு மாற்றம்

லண்டன்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் தங்களின் கடைசி குரூப் ஏ போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய ஆட்டத்தில், இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நந்தினி சர்மாவுக்குப் பதிலாக கிராந்தி கௌத் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

22 வயதான கிராந்தி கௌத் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய போதிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அதே நேரத்தில், வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற முந்தைய போட்டியில் நந்தினி சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Deepti Sharma aiming for historic wicket record against Australia

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதில் தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

மறுபுறம், ஆஸ்திரேலிய அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் அலானா கிங்கிற்குப் பதிலாக டாப்-ஆர்டர் பேட்டர் ஃபோப் லிட்ச்பீல்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 3-வது வரிசையில் களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் (Playing XI)

இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாகூர், கிராந்தி கௌத்.

IND vs IRE: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு.. இன்னும் 2 அடித்தால் போதும்!

IND vs IRE: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு.. இன்னும் 2 அடித்தால் போதும்!

ஆஸ்திரேலிய அணி: பெத் மூனி (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வோல், ஃபோப் லிட்ச்பீல்ட், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், அன்னாபெல் சதர்லேண்ட், நிக்கோலா கேரி, சோஃபி மோலினக்ஸ் (கேப்டன்), கிம் கார்த், லூசி ஹாமில்டன்.

வரலாற்று சாதனையின் விளிம்பில் தீப்தி சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வாழ்வா-சாவா போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைக்க தீப்திக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

தற்போது தீப்தி சர்மா மற்றும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஆகிய இருவரும் தலா 355 சர்வதேச விக்கெட்டுகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் இந்த சாதனையை தீப்தி சமன் செய்திருந்தாலும், கடந்த இரண்டு போட்டிகளில் அவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை.

IND vs IRE: இந்திய அணியில் 2 பேர் அறிமுகம்.. வைபவ் சூர்யவன்ஷி இன்று விளையாடுகிறாரா? ஸ்ரேயாஸ் பதில்

IND vs IRE: இந்திய அணியில் 2 பேர் அறிமுகம்.. வைபவ் சூர்யவன்ஷி இன்று விளையாடுகிறாரா? ஸ்ரேயாஸ் பதில்

மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாகத் திகழும் தீப்தி சர்மா, இத்தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இப்போட்டியில் அவர் புதிய சாதனையைப் படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Sunday, June 28, 2026, 19:10 [IST]
Other articles published on Jun 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+