Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND W VS ENG W- இப்படிலாமா ரன் அவுட் ஆக முடியும்.. ஒரு முறை இல்ல, இரு முறை.. ஹர்மன்பிரீத் பரிதாபம்

மும்பை : இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஆட்டம் இழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை டீஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த நான்கு நாட்கள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதில் சதீஷ் சுபா, ஜெமீமா ரோட்ரிகியூஸ், யாஷிகா பாட்யா, தீப்தி சர்மா ஆகியோர் அரை சதம் கடக்க இந்திய மகளிர் அணி 94 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்துள்ளது.

Ind w vs Eng w test match - Harmanpreet kaur hilarious run out created controversy

இதன் மூலம் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழந்த விதம்தான் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 ரன்கள் எடுத்ததில்லை. இன்றைய ஆட்டத்தில் அதற்கான வாய்ப்பு ஹர்மன்பிரித் கவுர் இடம் ஏற்பட்டது.

அவர் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் ஓடினார். அப்போது கிரீஸ் அருகே பேட்டை அவர் வைக்க பேட் அங்கேயே சிக்கிக்கொண்டது. இதை சரி செய்து அவர் கிரீஸ்க்குள் செல்வதற்கு முன்பாகவே இங்கிலாந்து வீராங்கனைகள் அவரை ரன் அவுட் ஆக்கினர். இதனால் பெரும் சோகத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் பெவிலியன் நோக்கி சென்றார்.

இம்முறை ஹர்மன்பிரீத் ஆட்டம் எடுப்பது முதல் முறையல்ல. கடந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆட்டத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. இதில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த முக்கியமான ஆட்டத்திலும் இதே போல தான் ஹர்மன்பிரீத் கிரீஸ்க்குள் வைக்காமல் ஆட்டமிழந்தார்.

தற்போது அதே தவறை மீண்டும் ஹர்மன்பிரித் செய்திருப்பதற்கு ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஹர்மன்பிரீத் கவுர் ராணி போல் நடந்து கொள்வதாகவும் இப்படி மோசமான முறையில் ஆட்டமிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Thursday, December 14, 2023, 20:35 [IST]
Other articles published on Dec 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+