ஐசிசி மகளிர் உலககோப்பை.. இந்திய அணி அபாரம்.. ஸ்மிருதி, பிராதிகா சதம்.. நியூசி.க்கு 325 ரன்கள் இலக்கு
மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 324 ரன்கள் இலக்கு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்ற இக்கட்டான கட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா அதிரடி காட்டி 212 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கனைகள் தடுமாறினர். பிரமாதமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார்.
இதில் 13 பவுண்டரிகளும்,இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று ஜெமிமா இறுதியில் 11 பௌண்டரிகளை அடித்து 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 11 பௌண்டரிகளை அடித்து 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் 10 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி 49 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 44 ஓவர்களில் 325 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இதனை அடுத்து நியூசிலாந்து மகளிர் அணி தங்களுடைய இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீராங்கனை சுசி பைட்ஸ் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்த அணி 20 ஓவர்கள் வரை விளையாடி அதன் பிறகு மழை குறுக்கிட்டால் தான் டக் வொர்த் லூயிஸ் விதி அமல்படுத்தப்படும். இல்லையென்றால் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்து விடும்.


Click it and Unblock the Notifications