ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்திய மகளிர் அணி அபார பந்துவீச்சு
துபாய்: மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வெறும் 55 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து இந்திய அணி அசத்தியுள்ளது.
மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் இதுவே ஆகும். இந்தப் போட்டியில் பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சாதகமாகவே அமைந்தது.

ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி நல்ல நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 28 ரன்கள் எடுப்பதற்குள் பாகிஸ்தான் அணி தனது அனைத்து 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 55 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 9 பேர் ஒற்றை இலக்கம் ரன்களில் மட்டுமே எடுத்தனர்.
துபாய் சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும், பாகிஸ்தான் அணியின் இந்த திடீர் சரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தீப்தி சர்மா உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை சரித்தனர்.இந்திய பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டையும், பிரேமா ராவத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் மகளிர் அணி தங்களது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக 2024ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் 56 ரன்கள் எடுத்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 60 ரன்களும், இந்தியாவுக்கு எதிராக 63 ரன்களையும் பாகிஸ்தான் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


