Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

INDW vs PAKW: பாகிஸ்தானை வீழ்த்தியது மகிழ்ச்சி.. வெற்றி பயணம் தொடரும்- இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்பிரித்

கொழும்பு: ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் சர்வதேச மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 12க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒரு தோல்வியை கூட இந்திய அணி தழுவாமல் உள்ளது.

போர் பதற்றத்திற்கு பிறகு இரு நாடுகளும் மோதிய நிலையில் பாகிஸ்தானை இந்திய அணி ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் விழித்திருக்கிறது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இந்த போட்டி எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது.

Ind W vs Pak W

இது ஒரு முக்கியமான வெற்றி ஆகும். எங்களுடைய பந்துவீச்சு இன்று சிறப்பாக இருக்கின்றது. கிராந்தி அபாரமாக பந்து வீசினார். ரேணுகாவும் அவருக்கு பந்துவீச்சில் நல்ல உறுதுணையாக இருந்தார். நாங்கள் பல வாய்ப்புகளை உருவாக்கினோம். எனினும் சில கேட்ச்களை தவறவிடும். ஆனால் இந்த வெற்றி உண்மையிலேயே எங்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது என்பது சுலபமாக இல்லை. நாங்கள் முடிந்தவரை 50 ஓவர் முழுவதும் நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன் மூலம் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியும் என்று பார்த்தோம். அது மட்டும் இல்லாமல் மழை பொழிவும் அதிக அளவு இருந்தது. இதனால் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக மாறியது.

கையில் விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு பிறகு அதிரடி காட்டலாம் என்று நினைத்தோம். அதன்படி ரிச்சா எங்களுக்கு முக்கியமான ஒரு 30 ரன்களை கொடுத்தார். எனினும் இந்த போட்டியில் நாங்கள் வென்ற விதம் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை இனிவரும் போட்டிகளில் பயன்படுத்த நாங்கள் நிச்சயம் முயற்சி செய்வோம்.

இந்தியாவுக்கு மீண்டும் சென்று எங்களுடைய பயணத்தை தொடர்வோம். அங்கு ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களுடைய வீராங்கனைகள் காம்பினேஷன் ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று நம்புகிறோம் என ஹர்மன்பிரீத் கவுர் அறிவித்துள்ளார்.

Story first published: Sunday, October 5, 2025, 23:48 [IST]
Other articles published on Oct 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+