Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND-W vs PAK-W: இந்திய கேப்டனை ஏமாற்றிய ரெப்ரீ.. பாகிஸ்தான் டாஸ் ஜெயிக்கவே இல்லை.. நடந்தது என்ன?

கொழும்பு: கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியில், முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது. போட்டியின் டாஸ் நிகழ்வின்போது, போட்டி நடுவர் (Match Referee) செய்த ஒரு பெரிய தவறால், பாகிஸ்தான் அணிக்குத் தவறாக டாஸ் வழங்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நாணயத்தைச் சுண்டினார். அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, தெளிவாக "Tails" (பூ) என்று கேட்டது பதிவானது. ஆனால், நாணயம் தரையில் விழுந்ததும், வர்ணனையாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் மெல் ஜோன்ஸ், அது "Heads" (தலை) என்று அறிவித்தார்.

விதிகளின்படி, பாகிஸ்தான் கேப்டன் 'டெயில்ஸ்' கேட்டு, நாணயம் 'ஹெட்ஸ்' விழுந்ததால், டாஸை இந்தியாதான் வென்றிருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த ஐசிசி போட்டி நடுவர் ஷாண்ட்ரே ஃபிரிட்ஸ், இந்தத் தவறை கவனிக்கத் தவறிவிட்டார். பாகிஸ்தான் கேப்டன் தவறாகக் கேட்டபோதிலும், அவருக்கு டாஸ் வென்றதாக அறிவித்துவிட்டார். இதனால், பெரும் குழப்பத்திற்கு மத்தியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

IND-W vs PAK-W Toss Controversy Pakistan captain given wrong advantage due to Refree s Blunder

இந்தச் சம்பவம் நேரலையில் ஒளிபரப்பானதால், ரசிகர்கள் உடனடியாகச் சமூக வலைதளங்களில் இதைக் குறிப்பிட்டு, போட்டி நடுவரின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கத் தொடங்கினர். ஒரு உலகக் கோப்பை போன்ற முக்கியமான போட்டியில், நடுவர் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய கேப்டனை மேட்ச் ரெப்ரீ ஏமாற்றி விட்டார் என சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

சர்ச்சையை மீறி இந்தியாவின் அபார வெற்றி!

டாஸ் சர்ச்சை ஆட்டத்தின் தொடக்கத்தில் ஒரு கரும்புள்ளியாக இருந்தாலும், அது இந்திய அணியின் ஆட்டத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 247 ரன்கள் குவித்தது.

இதையடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் வீராங்கனை சித்ரா அமீன் நம்பிக்கை அளிக்கும் வகையில் ரன் குவித்தார். 81 ரன்கள் குவித்த சித்ரா அமீன், இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து வரலாறு படைத்தார். இருப்பினும், அவரது சாதனை வீணானது.

இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக தீப்தி ஷர்மா, பாகிஸ்தான் பேட்டிங் வரிசையைச் சிதைத்தனர். முடிவில், இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, பாகிஸ்தானுக்கு எதிரான தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. டாஸ் சர்ச்சை ஒருபுறம் விவாதப் பொருளாக இருந்தாலும், களத்தில் இந்திய மகளிர் அணியின் ஆதிக்கம், அந்தச் சர்ச்சையை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Story first published: Monday, October 6, 2025, 7:44 [IST]
Other articles published on Oct 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+