Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடினமான போட்டியாக அமைந்தது.. வெற்றிக்கு தென்னாப்பிரிக்கா தகுதியானவர்கள்.. இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்பிரீத்

விசாகப்பட்டினம்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்திய அணியை 251 ரன்களில் சுருட்டியது.

இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் கடைசி நான்கு ஓவருக்கு 41 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போது தென்னாப்பிரிக்கா வீராங்கனை நதைன் 54 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

Harmanpreet Kaur

இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித் கவுர், இரண்டு அணிகளுக்குமே இது கடுமையான போட்டியாக அமைந்தது.இரண்டு அணிகளுமே சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் பேட்டிங் செய்யும்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். இருப்பினும் நாங்கள் 250 ரன்கள் மேல் எடுத்தது மகிழ்ச்சியை தருகிறது.

நாங்கள் ஆரம்ப கட்டத்தில் சில விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் டீ கிளர்க் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர்கள் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தால் எதோ வேறு ஆடுகளம் மாதிரி தெரிந்தது. எனினும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற தகுதியானவர்கள். ரிச்சா அபாரமாக எங்களுக்கு பேட்டிங் செய்தார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் நாங்கள் பெரிய இலக்கை நிச்சயம் எட்ட முடியும்.

தொடர்ந்து அவர் இதே போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். பேட்டிங்கில் முன் வரிசையில் நாங்கள் எங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடவில்லை. இதை நாங்கள் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால், பெரிய இலக்கை எட்ட வேண்டும். இது மிகப்பெரிய நீண்ட தொடர்.நிச்சயம் இது கடும் நெருக்கடியை கொடுத்தது.

எனினும் இந்த போட்டியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் எங்களை தொடர்ந்து நம்புகிறோம். நல்ல மனநிலையில் இருக்கின்றோம் என்று ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார். இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 9, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+