Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND W vs SL W: முதல் டி20யில் இந்தியாவுக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. பயமின்றி கிரிக்கெட் விளையாடுவோம்- ஹர்மன்பிரீத்

விசாகப்பட்டினம்: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற பிறகு தற்போது இந்திய அணி முதல்முறையாக கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குறித்து பேசிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹார்மன்பிரீத் கவுர், இன்று பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கின்றோம்.

Ind w vs sl w-

இந்த போட்டியில் 17 வயது வீராங்கனை ஆன வைஷ்ணவி அறிமுகம் செய்ய இருக்கின்றார். அவரை தவிர மற்ற அனுபவ வீரர்கள் அனைவரும் இருக்கிறார்கள். இது எங்களுக்கு புதிய தொடக்கம். புதிய பார்மட். நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடுவது குறித்து அறிவுறுத்தி வருகின்றோம்.

அதை தான் இந்த தொடரிலும் நாங்கள் செய்ய இருக்கின்றோம் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இலங்கை அணி கேப்டன் ஷம்மாரி அட்டப்பட்டு, இந்த தொடருக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி வருகின்றோம். கடந்த இரண்டு நாட்களாக வானிலை காரணமாக நாங்கள் கொஞ்சம் தடுமாறினோம்.

தற்போது அனைத்தும் சரியாகிவிட்டது. எங்கள் அணியில் ஆறு முதல் ஏழு இளம் வீராங்கனைகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். நாங்கள் ஒரு நல்ல அணியாக வந்திருக்கின்றோம். எங்களுடைய திட்டத்தில் சரியாக திட்டி அதை களத்தில் செயல்படுத்துவோம் என்று சம்மாரி அட்டப்பட்டு தெரிவித்திருக்கிறார்.

2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி எட்டு டி20 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி மூன்றில் தோல்வியை தழுவி இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்தில் டி20 மகளிர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இல் பார்க்கலாம்.

Story first published: Sunday, December 21, 2025, 18:47 [IST]
Other articles published on Dec 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+