IND W vs SL W: இலங்கையை ஊதி தள்ளிய இந்திய அணி.. 14.4 ஓவரில் போட்டியை முடித்த ஜெமிமா
விசாகப்பட்டினம்: இந்திய மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெறுகிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி முதல் முறையாக கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ளது.
விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பனிப்பொழிவு காரணமாக முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான சம்மாரி அட்டப்பட்டு 15 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.

இதனை அடுத்து மற்றொரு தொடக்க வீராங்கனையான விஷ்மி குணரத்னே 43 பந்துகளை எதிர் கொண்டு 39 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது வீராங்கனையாக களமிறங்கிய ஹாசினி 20 ரன்கள் எடுக்க ஹர்ஷிதா சமரவிக்ரமா 21 ரன்கள் எடுத்தார்.
அதன் பின் களமிறங்கிய ஹாசினி மற்றும் ஹர்சிதா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நிலாசிக்கா எட்டு ரன்களிலும், கவிஷா தில்ஹாரி ஆறு ரன்களிலும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது.
இந்திய பந்துவீச்சி தரப்பில் கிராந்தி கௌதி, தீப்தி ஷர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 20 வயது வீராங்கனை ஆன வைஷ்ணவி தன்னுடைய முதல் டி20 போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீராங்கனை செபாலி வர்மா அதிரடியாக ஆட முற்பட்டு 9 ரன்களில் வெளியேறினார். நட்சத்திர வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 3வது வீராங்கனையாக விளையாடிய ஜெமிமா ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்ட 44 பந்துகளில் 69 ரன்கள் எடுக்க, ஹர்மன்பிரீத் 15 ரன்கள் எடுத்தார். இதனால் 14.4 ஓவரில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் டி20 உலக கோப்பை தொடங்கியுள்ள நிலையில் அதற்காக இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications