Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவில் எந்த பவுலரும் செய்யாத மெகா சாதனை.. ஜிம்பாப்வேவை கதறவிட்ட 20 வயது நிக்கி பிரசாத்

மும்பை: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 போட்டியில் இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் நிக்கி பிரசாத், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றையே அதிர வைக்கும் புதிய சாதனையைப் படைத்துள்ளார். தனது சர்வதேச டி20 வாழ்க்கையில் பந்துவீச வந்த முதல் 2 பந்துகளிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் 3-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை இவர் தட்டிச் சென்றுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 20 வயதான நிக்கி பிரசாத், கடந்த 2025-ல் இந்திய 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 15-வது ஓவரை வீச கேப்டன் ஸ்மிருதி மந்தனா நிக்கியை அழைத்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே எதிரணியின் அதிக ரன் குவித்த பேட்டரான முகேரி-திரிபானோவை விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். அடுத்த 2-வது பந்திலேயே கவான்சுராவை எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டாக்கினார். இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய நிக்கி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

IND-W vs ZIM-W Niki Prasad Achieves Historic T20 Record by Taking Two Wickets in First Two Deliveries

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அஜித் அகர்கர், பிரக்யான் ஓஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது டி20 வாழ்க்கையின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ஆனால், அவர்களால் கூட அடுத்த பந்தில் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை சேர்த்து இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் 2 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை அள்ளிய ஒரே வீரர் என்ற புதிய சாதனையை நிக்கி பிரசாத் படைத்துள்ளார்.

உலக அளவில் 2005-இல் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் காஸ்ப்ரோவிச்-சும், 2019-இல் அமெரிக்காவின் அக்‌ஷதா ராவ்-உம் மட்டுமே இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருந்தனர். அவர்களுக்குப் பிறகு இந்த சாதனையை செய்த உலகின் 3-வது நபராக நிக்கி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

"200 ஸ்ட்ரைக் ரேட்டில் எல்லா மேட்ச்லயும் ரன்..".. அபிஷேக் சர்மா குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு

அக்டோபர் 16 அன்று சர்வதேசப் போட்டியில் அறிமுகமான இவர், 2-வது ஆட்டத்திலேயே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சால் ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 102 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா இந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Monday, October 19, 2026, 7:52 [IST]
Other articles published on Oct 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+