Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டெஸ்ட் போட்டி - ட்ரெண்ட் பிரிட்ஜில் இந்தியா இதுவரை!

ட்ரெண்ட்பிரிட்ஜ்: இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து 0-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெறவிருக்கிறது. இந்திய அணி இதுவரை அந்த மைதானத்தில் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணியும்,ஒரு போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளது. 3 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது.

India in trend bridge so far


இந்தியா விளையாடியுள்ள போட்டிகளின் தொகுப்பு இதோ

முதல் போட்டி: இந்திய அணி 1959ஆம் ஆண்டு முதல் முதலாக ட்ரெண்ட்பிரிட்ஜில் விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இரண்டாவது போட்டி : இந்திய அணி 1996ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் தனது இரண்டாவது போட்டியை விளையாடியது. இந்த போட்டி ட்ராவில் முடிவடைந்தது.


மூன்றாவது போட்டி : இந்திய அணி தனது மூன்றாவது போட்டியை 2002ஆம் ஆண்டு ஆடியது. அப்போட்டியும் ட்ராவில் முடிவடைந்தது.

நான்காவது போட்டி : இந்திய அணி 2007 ஆம் ஆண்டு தனது நான்காவது போட்டியை இதே மைதானத்தில் விளையாடியது. அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐந்தாவது போட்டி : இந்த மைதானத்தில் இந்திய அணி தனது ஐந்தாவது போட்டியில் 319 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ஆறாவது போட்டி : இந்திய அணி கடைசியாக இந்திய மைதானத்தில் 2014ஆம் ஆண்டு விளையாடியது. அந்த போட்டி ட்ராவில் முடிவடைந்தது.

தற்போது ஏழாவது முறையாக இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது. இரண்டாவது முறையாக இந்த மைதானத்தில் வெற்றி வாகை சூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.









Story first published: Saturday, August 18, 2018, 10:13 [IST]
Other articles published on Aug 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+