Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன் புண்ணியத்தால் இந்தியா அபார வெற்றி- முதலிடத்தையும் தக்க வைத்தது

India win at Eden Garden, retain No.1 Test ranking.
கொல்கத்தா: கொல்கத்தா 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் முதலிடம் பறிபோகும் அபாயத்தை வெற்றிகரமாக தவிர்த்து விட்டது.

இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வந்தது.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 296 ரன்களை எடுத்து சுருண்டது. பிறகு ஆடிய இந்திய அணியில் நான்கு பேர் சதங்கள் போட்டதால், 643 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து பெரும் வெற்றி இலக்கை துரத்திக் கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா. நேற்றைய ஆட்டம் மழையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்து விடுமோ, இந்தியாவிடமிருந்து நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்து போய் விடுமோ என்று ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர்.

இந்த நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இந்திய ரசிகர்களுக்கு குஷியூட்டும் வகையில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங்கும், அமீத் மிஸ்ராவும் அபாரமாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவை தடுமாற வைத்து விட்டனர். இதன் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.

அபாரமாக பந்து வீசிய ஹர்பஜன் சிங் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அமீத் மிஸ்ரா 3 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

இறுதியில், 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டு போனது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ், 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தாலும் அதன் வீரர் அம்லா அபாரமாக ஆடினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 127 ரன்களுடன் தூண் போல நின்றார்.

இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. இந்தியாவும் தனது டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆட்ட நாயகனாக தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+