Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை டெஸ்ட் 3வது நாளில் இந்தியா முழு ஆதிக்கம்.. முரளி விஜய், கோஹ்லி சதம் விளாசல்

மும்பை: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு நடுவேயான 4வது டெஸ்ட் போட்டியில், முரளி விஜய் மற்றும் விராட் கோஹ்லி சதத்துடன் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், இந்தியா இன்றைய 3வது நாள் ஆட்ட நேர இறுதியில் தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 451 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தைவிட, 51 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

India 451/7 at stumps on Day 3 of 4th Test against England

விராட் கோஹ்லி 147 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வேகமாக ரன் குவித்துவிட்டு, இங்கிலாந்தை 2வது இன்னிங்சுக்கு ஆட அழைக்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

முரளி விஜய் 136 ரன்கள் குவித்தது இன்றைய ஆட்டத்தின் சிறப்பாகும். தவிர, கோஹ்லி இவ்வாண்டில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்னை கடந்தார். ஒட்டுமொத்தமாக 4000 ரன்களையும் கடந்து சாதித்தார்.

Story first published: Saturday, December 10, 2016, 18:32 [IST]
Other articles published on Dec 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+