Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய முதல் ஒருநாள் போட்டி விளையாடி 50 ஆண்டுகள் நிறைவு.. ஆல்டைம் சிறந்த பிளேயிங் லெவன் எது?

மும்பை : சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் களம் இறங்கி நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது தவிர்க்க முடியாத ஒரு அணியாக விளங்கி வருகிறது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற வீரர்கள் எல்லாம் ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக விளங்கி இருக்கிறார்கள்.

india cricket team ind vs zim virat kohli

இதைப் போன்று கங்குலி, டிராவிட், தோனி போன்ற வீரர்களும் ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய உச்சம் தொட்டு இருக்கிறார்கள். இப்படி 50 ஆண்டுகளை இந்திய அணி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களுடைய முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது.

இதில் அஜித் வடேக்கர் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இதில் சுனில் கவாஸ்கர், ஃபரூக் இன்ஜினியர்,குண்டப்பா விஸ்வநாத், மதன்லால், பிஷன் பேடி வெங்கட்ராகவன் போன்ற வீரர்கள் எல்லாம் இடம் பெற்றிருந்தார்கள். இதில் இந்திய அணி முதலில் விளையாடி 265 ரன்கள் எடுக்க இதனை எடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.

இந்த நிலையில் 50 ஆண்டுகள் கடந்துள்ள இந்த சூழலில் இந்தியாவின் ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவன் என்ன என்று தற்போது பார்க்கலாம். இந்தியாவின் தொடக்க வீரர்கள் என்றால் அதில் பல பேர் போட்டி போடுவார்கள் இதில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு ஜோடியாக சேவாக் ஆல் டைம் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம் பிடிப்பார்.

நம்பர் மூன்றாவது வீரர் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு விராட் கோலி பெயரை சொல்லிவிடலாம். இதே போன்று நான்காவது வீரராக கங்குலி இடம்பெறலாம். ஐந்தாவது வீரராக அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் நிச்சயம் ஆல் டைம் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். ஆறாவது வீரராகவும் இந்திய அணியின் ஆல் டைம் கேப்டன் ஆகவும் தோனி நிச்சயம் இடம் பிடிப்பார். இவர் விக்கெட் கீப்பராகவும் அணியில் செயல்படுவார்.

ஏழாவது வீரராக இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கபில்தேவ் நிச்சயம் இடம் பிடிப்பார். எட்டாவது வீரராக ஹர்பஜன் சிங், ஒன்பதாவது வீரராக வேக பந்துவீச்சாளர் ஜாகிர் கான், பத்தாவது வீரராக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 11 வது வீரராக தேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் ஆகியோர் இடம் பெறுவார்கள். கூடுதலாக 12 வது வீரர் என்ற இடத்தில் சுழற் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளேக்கு வாய்ப்பு கொடுக்கலாம் உங்களுடைய ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவன் எது என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

Story first published: Sunday, July 14, 2024, 13:27 [IST]
Other articles published on Jul 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+