Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ருத்துராஜ் அதிரடி.. சதம் விளாசிய பட்டிதார்.. வெற்றி அருகே இந்தியா ஏ அணி

பெங்களூரு : நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 416 ரன்களை இலக்காக இந்திய ஏ அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏன் அணி நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.இருப்பினும் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். 127 பந்துகளில் 108 ரன்கள் அடித்துள்ள அவர் 12 பவுண்டரிகளையும் இரண்டு சிக்ஸர்களையும் அடித்தார். ரஜட் பட்டிதார் 30 ரன்களும், உபேந்திரா யாதவ் 76 ரன்களும் எடுக்க இந்திய ஏ அணி 293 ரன்கள் எடுத்தது.

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

இதனை அடுத்து நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.இதில் மார்க் சாப்மன் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுக்க சீன் சோலியா அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் துணை நிற்காததால் நியூசிலாந்து ஏணி 237 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் இந்திய ஏ அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன் 4 ரன்களில் வெளியேறினார்.

ருத்துராஜ் சதம் மிஸ்

ருத்துராஜ் சதம் மிஸ்

கேப்டன் பிரயாங் பஞ்சால் 17 ரன்களுடனும் ருத்துராஜ் கெய்க்வாட் 18 ரன்கள் உடனும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் பிரியாங் பஞ்சால் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட், 2வது இன்னிங்சிலும் சதம் அடிக்கும் வாய்ப்பை 6 ரன்களில் தவறவிட்டு 94 ரன்களில் ஆட்டமிழந்ததார்'.இந்திய ஏ அணியில் ரஜத் பட்டிதார் அதிரடியை காட்ட, ரன்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

416 ரன்கள் இலக்கு

416 ரன்கள் இலக்கு

இதில் பட்டிதார் சதம் விளாச, சர்ஃபிராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் இந்திய ஏ அணி 2வது இன்னிங்சில் 359 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்தியா 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெறலாம்.

Story first published: Saturday, September 17, 2022, 20:08 [IST]
Other articles published on Sep 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+