Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடர்..!! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. இளம் வீரரை கேப்டனாக நியமித்த இந்திய அணி

மும்பை: தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப் பட்டு உள்ளது. ஒரு போட்டிக்கு மட்டும் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முன்னதாக தென் ஆப்ரிக்க ஏ அணி ஏஇந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது.

ஒரு நாள் மற்றும் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இந்திய ஏ அணியை எதிர்த்து விளையாடும். அதற்காக இந்திய ஏ அணியை தற்போது தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்தியா ஏ அணியை தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் கூடியது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

முதல் 4 நாள் போட்டி செப்டம்பர் 9 முதல் திருவனந்தபுரத்திலும், இரண்டாவது போட்டி செப்டம்பர் 17 முதல் மைசூரிலும் நடைபெறும். 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவித்துள்ளது.

இளம்வீரர் சுப்மன்

இளம்வீரர் சுப்மன்

அதில் முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிக்கு இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்ட ஒரு இளம் வீரர்.

கேப்டனாக நியமனம்

கேப்டனாக நியமனம்

அந்த அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது அவரை அங்கீகரிக்கும் விதமாக, முதல் போட்டியில் இவர் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். 2வது போட்டிருக்கு விருத்திமான் சஹா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடவில்லை

ஆடவில்லை

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர் தற்போது வரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை அவரையும் ஆறுதல்படுத்தும் விதமாக கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. இளம் வீரர் சுப்மன் கில் முதல் ஆட்டத்திற்கு கேப்டனாகவும், 2வது ஆட்டத்திற்கு சஹாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

யார்? யார்?

யார்? யார்?

முதல் போட்டிக்கு: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அன்மோல் பிரீத் சிங், ரிக்கி பூய், அங்கீத் பாவ்னே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), கே கவுதம், ஷாபாஸ் நதீம், ஷார்துல் தாகூர், முகமது சிராஜ், துஷார் தேஷம்பாண்டே.

அணி விவரம்

அணி விவரம்

2 வது போட்டி: பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மான் கில், அன்மோல் பிரீத் சிங், கருண் நாயர், விருத்திமான் சஹா (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கே கவுதம், குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம், விஜய் சங்கர், சிவம் யாதவ் துபே, உமேஷாம் யாதேவ். அவேஷ் கான்.

Story first published: Monday, September 2, 2019, 15:34 [IST]
Other articles published on Sep 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+