Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி ஆடும் இந்தியா ஏ முத்தரப்பு ஒருநாள் தொடர் எப்போது? லைவ் மேட்ச் பார்ப்பது எப்படி?

கொழும்பு: இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிராக, திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணி விளையாட உள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 9 முதல் ஜூன் 21 வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷியும் ஆட உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

மொத்தம் 7 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர், இலங்கையின் தம்புள்ளாவில் உள்ள ரங்கிரி தம்புள்ளா சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இரட்டை சுற்று லீக் முறையில் (டபுள் ரவுண்ட்-ராபின்) நடைபெறும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும்.

India A Tri-Series 2026 Schedule Squads and Live Streaming Details for One-Day Tournament in Sri Lanka

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூன் 21 அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். வெற்றிக்கு 2 புள்ளிகளும், முடிவில்லா போட்டிக்கு 1 புள்ளியும் வழங்கப்படும்.

பொதுவாக இந்தியா ஏ அணிகள் விளையாடும் போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது அரிதான ஒன்றாகும். ஆனால், ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ஆரஞ்சு தொப்பி வென்ற 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பிரபலம் காரணமாக, இந்த முத்தரப்பு தொடரை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்ய சோனி நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்திய ஏ அணியை திலக் வர்மா வழிநடத்த, ரியான் பராக் துணை கேப்டனாகச் செயல்படுகிறார். ஆப்கானிஸ்தான் ஏ அணியை இம்ரான் மிர் வழிநடத்துகிறார். இலங்கை ஏ அணியை சஹான் ஆராச்சிகே வழிநடத்த, நிரோஷன் டிக்வெல்லா, அவிஷ்கா பெர்னாண்டோ, சதீரா சமரவிக்ரமா போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

போட்டி அட்டவணை (இந்திய நேரப்படி காலை 10:00 மணி):

ஜூன் 9 (செவ்வாய்): இலங்கை ஏ - இந்தியா ஏ
ஜூன் 11 (வியாழன்): ஆப்கானிஸ்தான் ஏ - இந்தியா ஏ
ஜூன் 13 (சனி): இலங்கை ஏ - ஆப்கானிஸ்தான் ஏ
ஜூன் 15 (திங்கள்): இலங்கை ஏ - இந்தியா ஏ
ஜூன் 17 (புதன்): ஆப்கானிஸ்தான் ஏ - இந்தியா ஏ
ஜூன் 19 (வெள்ளி): இலங்கை ஏ - ஆப்கானிஸ்தான் ஏ
ஜூன் 21 (ஞாயிறு): இறுதிப் போட்டி

“விராட் கோலி அண்ணா என் தோளில் கை வைத்தபோது..” நெகிழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி.. என்ன சொன்னார்?

“விராட் கோலி அண்ணா என் தோளில் கை வைத்தபோது..” நெகிழ்ந்த வைபவ் சூர்யவன்ஷி.. என்ன சொன்னார்?

இந்திய ஏ அணி விவரம்: திலக் வர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணை கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா, விப்ராஜ் நிகாம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான்.

நேரடி ஒளிபரப்பு விவரங்கள்: இந்த முத்தரப்பு தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரலையாகக் காணலாம். ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள் சோனிலிவ் செயலி மற்றும் இணையதளம் வழியாக நேரலையில் போட்டிகளைக் கண்டுகளிக்கலாம்.

Story first published: Sunday, June 7, 2026, 14:35 [IST]
Other articles published on Jun 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+