Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து லையன்ஸ் அபார ஆட்டம்.. இந்தியா ஏ அணியில் தனியாக போராடிய ஆர்சிபி வீரர்

அகமதாபாத் : இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் அதிகாரப்பூர்வற்ற டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் களம் இறங்கினார்.

இந்த போட்டியில் சாய் சுதர்சன், ரஜத் பட்டிதார், சப்ராஸ்கான், கேஎஸ் பரத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

India a vs England lions - Rajat Patidar scored century as india a trails more than 300 runs

இதை அடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தொடக்க வீர அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜென்னிங்ஸ் விளையாடினர். இதில் அலெக்ஸ் லீஸ் 73 ரன்கள் மற்றும் ஜென்னிங்ஸ் 154 ரன்கள் எடுத்து அபார தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ஜோஸ் போணன் 125 ரன்களும், டான் மூஸ்லி 68 ரன்களும் எடுக்க இறுதியில் மேத்தியூ பாட்ஸ் 44 ரன்கள் சேர்த்தார்.

இதனால் 118 ஓவர் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய ஏ அணி தரப்பு சுழற் பந்துவீச்சாளர் மனவ் சுதார் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து இந்திய ஏ அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் நான்கு ரன்களில் வெளியேற சர்பிராஸ்கான் நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று பிரதோஷ் ரஞ்சன்பால் டக் அவுட் ஆக இந்திய ஏ அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆர்சிபி வீரர் ரஜத் பட்டிதார் மட்டும் அபாரமாக நின்று தனியாளாக நின்று இந்திய ஏ அணியை காப்பாற்றினார்.

சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 132 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். இதில் 18 பௌண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் 40 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்சை விட 338 ரன்கள் பின் தங்கி இருக்கிறது.

Story first published: Thursday, January 18, 2024, 17:25 [IST]
Other articles published on Jan 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+