Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் பயிற்சி.. அடி வாங்கும் இந்தியா ஏ அணி

புளோம்பவுன்டைன் ; தென்னாப்பிரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, அந்நாட்டு ஏ அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

பிரியாங் பான்சால் தலைமையிலான இந்திய ஏ அணியில் பிரித்வி ஷா, விஹாரி, அப்ரஜித்,ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

India A vs SA A 1st test Day 1 SA Batting

முதல் டெஸ்ட் போட்டி புளோம்பவுன்டைன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவிச நவதீப் சைனி தென்னாப்பிரிக்க வீரர் சாரலை டக் அவுட்டாக்கினார். இதனைத் தொடர்ந்து மற்றொரு வீரர் ரெனார்ட் விக்கெட்டை நக்வாஸ்வல்லா வீழ்த்தினார். இதனால் தென்னாப்பிரிக்க ஏ அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த பீட்டர் மாலன், டோனி களத்தில் நங்கூரம் போல் பாய்ந்து, ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை வீழ்த்த இந்திய வீரர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய டோனி சதம் விளாசினார். பீட்டர் தற்போது சதத்தை நெருங்கி வருகிறார்.

57 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா ஏ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் ராகுல் சாஹரின் பந்துவீச்சு சுத்தமாக ஏடுபடவில்லை. இதனால் ரன்களை கடடுப்படுத்தும் முயற்சியில் இந்திய ஏ அணி வீரர்கள் உள்ளனர்

ஆடுகளமும் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஸ்விங் ஆனது. ஆனால் போக போக ஆடுகளத்தின் ஈரப்பதம் கறைந்து தறபோது பேட்டிங் பேரடைஸ் போல் செயல்படுகிறது. இதனால் இந்திய ஏ அணி பேட்டர்ஸ் ஒரு பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Story first published: Tuesday, November 23, 2021, 19:26 [IST]
Other articles published on Nov 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+