Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி டிரிபள் சாதனை படைக்கும்.. ஒரே நேரத்தில் 3 கோப்பை வெல்ல வாய்ப்பு.. இங்கி. வீரர் கணிப்பு

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதையடுத்து, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன், இந்திய அணிக்கு வரலாற்றுச் சாதனைக்கான வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். அகமதாபாத் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த சூழலில், சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2027 உலககோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக மைக்கேல் அதர்டன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சமீபத்திய ஐசிசி உலகப் போட்டிகளில், இந்தியா 32 இல் 30 இல் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் ஒரே தோல்விகள் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டி மட்டுமே."

"இந்திய அணி அனைத்து வெள்ளைப்பந்து வடிவப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அணியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் கைப்பற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இப்போது உள்ளது, இதுவே அவர்களின் அடுத்த இலக்கு என்பதில் சந்தேகமில்லை" என்றார்.

இந்த நிலையில், இந்தியா டி20 போட்டியில் சிறப்பாக விளையாடினாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவு இருத்தரப்பு தொடரில் சோபிக்கவில்லை, அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கூட இந்திய அணிஇழந்தது. இதே போன்று டெஸ்ட் போட்டியிலும் நாம் தொடர் தோல்விகளை சந்தித்து வருறோம்.

இந்தியா டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றில் சிறப்பாகத் தொடங்கியது. எனினும், சூப்பர் எட்டுச் சுற்றில் தென்னாப்பிரிக்காவுடன் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. சஞ்சு சாம்சனின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 97 ரன்கள் ஆட்டம் தான் இந்திய அணிக்கு முக்கியமான வெற்றியைத் தேடித் தர, அரையிறுதியிலும் அவர் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் குவித்து இந்தியா இறுதிக்கு முன்னேறியது. பின்னர் இறுதிப் போட்டியிலும் 89 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

Story first published: Tuesday, March 10, 2026, 13:34 [IST]
Other articles published on Mar 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+